Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 708

பொருட்பால்அங்கவியல்71. குறிப்பறிதல்

முகம்நோக்கி நிற்க அமையும் அகம்நோக்கிஉற்ற துணர்வார்ப் பெறின்.

mukanOkki niRka amaiyum akanOkkiuRRa tuNarvArp peRin

Varshan

பொருள் / உரை

முருகா எளிய உரை

ஒருவரது உள்ளத்து எண்ணங்களை முகக்குறிப்பால் அறிந்து அவரது துன்பத்தையும் தேவையையும் தீர்க்கவல்ல நுண்ணறிவாளரைப் பெற்றுவிட்டால், அவரிடம் எதுவும் கூறாமல் அவரது முகத்தை நோக்கி எதிரே நின்றாலே போதுமானது.

• அகம்நோக்கி உற்றது உணர்வார்ப் பெறின் = உள்ளத்து எண்ணங்களை அறிந்து தேவையை உணர்பவரைப் பெற்றால்,• முகம்நோக்கி நிற்க அமையும் = அவரிடம் வாய் திறந்து சொல்லாமல் எதிரே நின்றாலே போதும்.

மு.வரதராசன்

உள்ளக் குறிப்பை நோக்கி உற்றதை உணரவல்லவரைப் பெற்றால், (அவரிடம் எதையும் கூறாமல்) அவறுடைய முகத்தை நோக்கி நின்றால் போதும்.

பரிமேலழகர்

அகம் நோக்கி உற்றது உணர்வார்ப் பெறின் - குறையுறுவானும் தன் மனத்தைக் குறிப்பான் அறிந்து தானுற்ற அதனைத் தீர்ப்பாரைப் பெறின்; முகம்நோக்கி நிற்க அமையும் - அவர் தன் முகம் நோக்கும் வகை தானும் அவர் முகம் நோக்கி அவ்வெல்லைக்கண் நிற்க அமையும். ('உணர்வார்' எனக் காரியத்தைக் காரணமாக்கிக் கூறினார். அவ்வெல்லையைக் கடந்து செல்லுமாயின் இருவர்க்குஞ் சிறுமையாமாகலின், அது வேண்டா என்பதாம்.குறையுறுவான் இயல்பு கூறுவார் போன்று கருவி கூறியவாறு. இவைமூன்று பாட்டானும் குறிப்பறிதற் கருவி முகம் என்பது கூறப்பட்டது.)

சாலமன் பாப்பையா

தன் மனத்தைக் குறிப்பால் அறிந்து தான் எண்ணியதை அறிபவரைத் துணையாகப் பெற்றால், அவர்களின் முகத்தை அவன் பார்த்து நின்றாலே போதும்.

Meaning in English

To see the face is quite enough, in presence brought, When men can look within and know the lurking thought

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout