பகைமையும் கேண்மையும் கண்ணுரைக்கும் கண்ணின்வகைமை உணர்வார்ப் பெறின்.
pakaimaiyum kENmaiyum kaNNuraikkum kaNNinvakaimai uNarvArp peRin
Sowmiya Karthik
பொருள் / உரை
முருகா எளிய உரை
பார்வையின் நுட்பமான வேறுபாடுகளைப் புரிந்து கொள்ளும் ஆற்றல் உடையவர்க்கு, அடுத்தவர் உள்ளத்தில் உள்ள பகையையும் அல்லது நட்பையும் அவர் சொல்லாமலேயே அவரது கண்களே தெளிவாகக் காட்டிவிடும்.
• கண்ணின் வகைமை உணர்வார்ப் பெறின் = பார்வையின் வேறுபாடுகளை அறியும் நுண்ணறிவாளரைப் பெற்றால்,• பகைமையும் கேண்மையும் கண்ணுரைக்கும் = உள்ளத்தில் உள்ள பகையையும் நட்பையும் கண்களே கூறிவிடும்.
மு.வரதராசன்
கண்பார்வையின் வேறுபாடுகளை உணரவல்லவரைப் பெற்றால்( ஒருவனுடைய மனதில் உள்ள) கையையும் நட்பையும் அவனுடைய கண்களே சொல்லி விடும்.
பரிமேலழகர்
கண்ணின் வகைமை உணர்வார்ப் பெறின் - வேந்தர் தம் நோக்கு வேறுபாட்டின் தன்மையை அறியவல்ல அமைச்சரைப் பெறின்; பகைமையும் கேண்மையும் கண் உரைக்கும்- அவர்க்கு மனத்துக் கிடந்த பகைமையையும் ஏனைக் கேண்மையையும் வேற்று வேந்தர் சொல்லிற்றிலராயினும், அவர் கண்களே சொல்லும். (இறுதிக்கண் 'கண்' ஆகுபெயர். நோக்கு வேறுபாடாவன: வெறுத்த நோக்கமும், உவந்த நோக்கமும். உணர்தல்: அவற்றை அவ்வக்குறிகளான் அறிதல்.)
சாலமன் பாப்பையா
அடுத்தவர்களின் பார்வை வேறுபடுவதைக் கொண்டே அவர்தம் மனக்கருத்தை அறியும் ஆற்றல் உடையவர்க்கு, பகைமையையும் நட்பையும் அவர்கள் சொல்லவில்லை என்றாலும் அவர்தம் கண்களே சொல்லிவிடும்.
Meaning in English
The eye speaks out the hate or friendly soul of man; To those who know the eye's swift varying moods to scan





