Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 707

பொருட்பால்அங்கவியல்71. குறிப்பறிதல்

முகத்தின் முதுக்குறைந்தது உண்டோ உவப்பினும்காயினும் தான்முந் துறும்.

mukattin mutukkuRainta tuNTO uvappinumkAyinum tAnmun tuRum

Karan

பொருள் / உரை

முருகா எளிய உரை

ஒருவர் உள்ளத்தில் மகிழ்ச்சி தோன்றினாலும் அல்லது கோபம் தோன்றினாலும், அதை வெளிப்படுத்துவதில் முந்தி நிற்கும் முகத்தைக் காட்டிலும் நுண்ணறிவு மிக்க பொருள் வேறு எதுவும் இல்லை.

• உவப்பினும் காயினும் தான் முந்துறும் = மகிழ்ச்சியோ கோபமோ எதுவாயினும் முந்திக்கொண்டு காட்டும்,• முகத்தின் முதுக்குறைந்தது உண்டோ = முகத்தைக் காட்டிலும் நுண்ணறிவு மிக்க பொருள் வேறு உண்டோ?

மு.வரதராசன்

ஒருவன் விருப்பம் கொண்டாலும், வெறுப்புக் கொண்டாலும் அவனுடைய முகம் முற்ப்பட்டு அதைத் தெரிவிக்கும், அம் முகத்தைவிட அறிவு மிக்கது உண்டோ.

பரிமேலழகர்

உவப்பினும் காயினும் தான் முந்துறும் - உயிர் ஒருவனை உவத்தலானும் காய்தலானும் உறின், தான் அறிந்த அவற்றின்கண் அதனின் முற்பட்டு நிற்கும் ஆகலான்; முகத்தின் முதுக்குறைந்தது உண்டோ - முகம் போல அறிவுமிக்கது பிறிது உண்டோ? இல்லை. ('உயிர்க்கே அறிவுள்ளது, ஐம்பூதங்களான இயன்ற முகத்திற்கு இல்லை' என்பாரை நோக்கி, உயிரது கருத்தறிந்து அஃது உவக்குறின் மலர்ந்தும், காய்வுறின் கருகியும் வரலான், 'உண்டு' என மறுப்பார் போன்று, குறிப்பு அறிதற்குக் கருவி கூறியவாறு.)

சாலமன் பாப்பையா

ஒருவன் மனத்தால் விரும்பினாலும் வெறுத்தாலும் அதை வெளிக்காட்டுவதில் முந்தி நிற்கும் முகத்தைக் காட்டிலும் அறிவு மிக்கது வேறு உண்டோ?

Meaning in English

Than speaking countenance hath aught more prescient skill? Rejoice or burn with rage, 'tis the first herald still

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout