அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்கடுத்தது காட்டும் முகம்.
aTuttatu kATTum paLingkupOl nenjsamkaTuttatu kATTum mukam
Amirthavarshini
பொருள் / உரை
முருகா எளிய உரை
தன் அருகில் இருக்கும் பொருளின் நிறத்தை அப்படியே பிரதிபலித்துக் காட்டும் பளிங்குக் கண்ணாடியைப் போல, ஒருவருடைய உள்ளத்தில் எழும் தீவிரமான உணர்வுகளை அவரது முகமே உடனுக்குடன் வெளிக்காட்டிவிடும்.
• அடுத்தது காட்டும் பளிங்குபோல் = அருகில் உள்ள பொருளின் நிறத்தைக் காட்டும் பளிங்கு போல,• நெஞ்சம் கடுத்தது காட்டும் முகம் = ஒருவன் உள்ளத்தில் உள்ளதை அவனது முகமே காட்டிவிடும்.
மு.வரதராசன்
தன்னை அடுத்தப் பொருளைத் தன்னிடம் காட்டும் பளிங்கு போல், ஒருவனுடைய நெஞ்சில் மிகுந்துள்ளதை அவனுடைய முகம் காட்டும்.
பரிமேலழகர்
அடுத்தது காட்டும் பளிங்கு போல் - தன்னை அடுத்த பொருளது நிறத்தைத் தானே கொண்டு காட்டும் பளிங்கு போல்; நெஞ்சம் கடுத்தது முகம் காட்டும் - ஒருவன் நெஞ்சத்து மிக்கதனை அவன் முகம் தானே கொண்டு காட்டும். ('அடுத்தது' என்பது ஆகுபெயர். கடுத்தது என்பது 'கடி' என்னும் உரிச்சொல் அடியாய் வந்த தொழிற் பெயர். உவமை ஒரு பொருள் பிறிதொரு பொருளின் பண்பைக் கொண்டு தோற்றுதலாகிய தொழில் பற்றி வந்தது.)
சாலமன் பாப்பையா
தன் அருகே இருக்கும் பொருளின் நிறத்தைக் காட்டும் பளிங்கினைப்போல் ஒருவனது மனத்தே நிகழ்வதை அவன் முகம் காட்டும்.
Meaning in English
As forms around in crystal mirrored clear we find, The face will show what's throbbing in the mind





