Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 705

பொருட்பால்அங்கவியல்71. குறிப்பறிதல்

குறிப்பிற் குறிப்புணரா வாயின் உறுப்பினுள்என்ன பயத்தவோ கண்.

kuRippiR kuRippuNarA vAyin uRuppinuLenna payattavO kaN

Netra

பொருள் / உரை

முருகா எளிய உரை

முகத்தில் தோன்றும் அடையாளங்களைக் கண்டும் அடுத்தவரின் உள்ளத்து எண்ணங்களை உணர முடியாவிட்டால், உடலின் முதன்மை உறுப்பான கண்களால் வேறு என்ன பயன் இருக்க முடியும்?

• குறிப்பின் குறிப்புணரா ஆயின் = முகக் குறிப்பைக் கண்டும் உள்ளக் குறிப்பை உணர முடியாவிட்டால்,• உறுப்பினுள் என்ன பயத்தவோ கண் = உடலுறுப்புகளுள் சிறந்த கண்களால் என்ன பயன் உண்டு?

மு.வரதராசன்

(முகம் கண் இவற்றின்) குறிப்புக்களால் உள்ளக்குறிப்பை உணராவிட்டால், ஒருவனுடைய உறுப்புகளுள் கண்கள் என்னப் பயன்படும்.

பரிமேலழகர்

குறிப்பின் குறிப்பு உணரா ஆயின் - குறித்தது காணவல்ல தம் காட்சியால் பிறர் குறிப்பினை உணரமாட்டாவாயின்; உறுப்பினுள் கண் என்ன பயத்தவோ - ஒருவன் உறுப்புக்களுள் சிறந்த கண்கள் வேறு என்ன பயனைச் செய்வன? (முதற்கண் 'குறிப்பு' ஆகுபெயர். குறிப்பு அறிதற்கண் துணையாதல் சிறப்புப்பற்றி உயிரது உணர்வு கண்மேல் ஏற்றப்பட்டது: அக்கண்களால் பயன் இல்லை என்பதாம். இவை இரண்டு பாட்டானும் குறிப்பு அறியாரது இழிபு கூறப்பட்டது.)

சாலமன் பாப்பையா

ஒருவன் குறிப்பைக் கண்ட பின்பும் அவன் மனக்கருத்தை அறியமுடியவில்லை என்றால், உறுப்புகளுள் சிறந்த கண்களால் என்ன நன்மை?

Meaning in English

By sign who knows not sings to comprehend, what gain, 'Mid all his members, from his eyes does he obtain

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout