குறித்தது கூறாமைக் கொள்வாரோ டேனைஉறுப்போ ரனையரால் வேறு.
kuRittatu kURAmaik koLvArO TEnaiuRuppO ranaiyarAl vERu
M. J. Sruthiranjani
பொருள் / உரை
முருகா எளிய உரை
சொல் பொருள் (பதவுரை):• குறித்தது கூறாமைக் கொள்வாரோடு = மனதில் நினைத்ததைச் சொல்லாமலேயே அறியும் நுண்ணறிவாளரோடு,• ஏனை உறுப்போ ரனையரால் வேறு = பிறர் உடலமைப்பால் ஒத்திருந்தாலும் அறிவால் முற்றிலும் வேறுபட்டவர்களே.எளிய விளக்கம்:ஒருவர் மனதில் கருதியதை அவர் கூறாமலேயே அறியும் ஆற்றல் உடையவர்களோடு, அந்த ஆற்றல் இல்லாதவர்கள் உடலுறுப்புகளால் மனிதர்களாக ஒத்திருந்தாலும், அறிவின் நுட்பத்தால் முற்றிலும் வேறுபட்டவர்களே ஆவார்கள்.
மு.வரதராசன்
ஒருவன் மனதில் கருதியதை அவன் கூறாமலே அறிந்து கொள்ள வல்லவரோடு மற்றவர் உறுப்பால் ஒத்தவராக இருந்தாலும் அறிவால் வேறுபட்டவர் ஆவார்.
பரிமேலழகர்
குறித்தது கூறாமைக் கொள்வாரொடு - ஒருவன் மனத்துக் கருதிய அதனை அவன் கூறவேண்டாமல் அறியவல்லாரோடு; ஏனை உறுப்பு ஓரனையர் -மற்றை மாட்டாதார் உறுப்பால் ஒரு தன்மையராக ஒப்பாராயினும்; வேறு - அறிவான் வேறு. ('கொள்ளாதார்' என்பதூஉம், 'அறிவான்' என்பதூஉம் அவாய் நிலையான் வந்தன. சிறந்த அறிவின்மையின், விலங்கு என்னும் கருத்தான் 'வேறு' என்றார்.)
சாலமன் பாப்பையா
ஒருவன் மனத்துள் நினைப்பதை அவன் சொல்லாமலேயே அறியம் ஆற்றல் உடையவரோடு அந்த ஆற்றல் இல்லாதவர் உறுப்பால் ஒத்தவர்; அறிவால் வேறுபட்டவர் ஆவார்.
Meaning in English
Who reads what's shown by signs, though words unspoken be, In form may seem as other men, in function nobler far is he





