Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 699

பொருட்பால்அங்கவியல்70. மன்னரைச் சேர்ந்தொழுதல்

கொளப்பட்டேம் என்றெண்ணிக் கொள்ளாத செய்யார்துளக்கற்ற காட்சி யவர்.

koLappaTTEm enReNNik koLLAta seyyArtuLakkaRRa kATsi yavar

Amirthavarshini

பொருள் / உரை

முருகா எளிய உரை

சலனமற்ற தெளிந்த நல்லறிவு உடையவர்கள், 'நாம் மன்னரால் மிகவும் விரும்பப்பட்டு மதிக்கப்பட்டவர்கள்' என்ற மமதையில், மன்னரும் நீதியும் ஏற்காத தகாத செயல்களை ஒருபோதும் செய்ய மாட்டார்கள்.

• துளக்கற்ற காட்சியவர் = அசைவற்ற தெளிந்த அறிவுடைய சான்றோர்கள்,• கொளப்பட்டேம் என்றெண்ணிக் கொள்ளாத செய்யார் = மன்னரால் மதிக்கப்பட்டோம் என்று எண்ணி ஏற்கத்தகாத செயல்களைச் செய்ய மாட்டார்கள்.

மு.வரதராசன்

அசைவற்ற தெளிந்த அறிவினை உடையவர் யாம் அரசரால் விரும்பப்பட்டோம் என்று எண்ணி அவர் விரும்பாதவற்றைச் செய்யமாட்டார்.

பரிமேலழகர்

கொளப்பட்டேம் என்று எண்ணிக் கொள்ளாத செய்யார் - அரசனால் யாம்நன்கு மதிக்கப்பட்டேம் என்று கருதி அவன் விரும்பாதவற்றைச் செய்யார்; துளக்கு அற்ற காட்சியவர் - நிலைபெற்ற அறிவினையுடையார். (கொள்ளாதன செய்து அழிவு எய்துவார் கொளப்பாட்டிற்குப்பின் தம்மை வேறொருவராகக் கருதுவர் ஆகலின், முன்னையராகவே கருதி அஞ்சியொழுகுவாரைத் 'துளக்கு அற்ற காட்சியவர்' என்றார்.)

சாலமன் பாப்பையா

சலனம் அற்ற அறிவை உடையவர்கள், தாம் ஆட்சியாளரால் மிகவும் மரியாதைக்கு உரியவர்கள் என்று எண்ணி, ஆட்சியாளர் விரும்பாதவற்றைச் செய்யமாட்டார்.

Meaning in English

'We've gained his grace, boots nought what graceless acts we do', So deem not sages who the changeless vision view

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout