Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 698

பொருட்பால்அங்கவியல்70. மன்னரைச் சேர்ந்தொழுதல்

இளையர் இனமுறையர் என்றிகழார் நின்றஒளியோடு ஒழுகப் படும்.

iLaiyar inamuRaiyar enRikazhAr ninRaoLiyO Tozhukap paTum

Shreenidhi Deepak

பொருள் / உரை

முருகா எளிய உரை

ஆட்சியாளர் நம்மை விட வயதில் இளையவர் என்றோ, நமக்கு உறவினர் என்றோ எண்ணி அவரை இகழாமல், அவர் வகிக்கும் தலைமைப் பதவிக்குரிய மாண்பையும் ஒளியையும் உணர்ந்து தகுந்த மரியாதையோடு நடந்து கொள்ள வேண்டும்.

• இளையர் இனமுறையர் என்று இகழார் = வயதில் சிறியவர் என்றோ உறவினர் என்றோ அரசரை இகழாமல்,• நின்ற ஒளியோடு ஒழுகப்படும் = அவர் வகிக்கும் பதவிக்குரிய மாண்போடு பொருந்தி மரியாதையுடன் நடந்து கொள்ள வேண்டும்.

மு.வரதராசன்

(அரசரை) எமக்கு இளையவர், எமக்கு இன்ன முறை உடையவர் என்று இகழாமல் அவருடைய நிலைக்கு ஏற்றவாறு அமைந்த புகழுடன் பொருந்த நடக்க வேண்டும்.

பரிமேலழகர்

இளையர் இன முறையர் என்று இகழார் - இவர் எம்மின் இளையர் என்றும், எமக்கு இன்ன முறையினையுயடையர் என்றும் அரசரை அவமதியாது; நின்ற ஒளியொடு ஒழுகப்படும் - அவர் மாட்டு நின்ற ஒளியொடு பொருந்த ஒழுகுதல் செய்யப்படும். (ஒளி, உறங்காநிற்கவும் தாம் உலகம் காக்கின்ற அவர் கடவுள்தன்மை. அதனோடு பொருந்த ஒழுகலாவது, அவர் கடவுளரும் தாம் மக்களுமாய் ஒழுகுதல். அவ்வொளியால் போக்கப்பட்ட இளமையும் முறைமையும் பற்றி இகழ்வராயின், தாமும் போக்கப்படுவர் என்பது கருத்து.)

சாலமன் பாப்பையா

ஆட்சியாளருடன் பழகும்போது இவர் என்னைக் காட்டிலும் வயதில் சிறியவர்; இவர் உறவால் எனக்கு இன்ன முறை வேண்டும் என்று எண்ணாமல், ஆட்சியாளர் இருக்கும் பதவியை எண்ணி அவருடன் பழகுக.

Meaning in English

Say not, 'He's young, my kinsman,' despising thus your king; But reverence the glory kingly state doth bring

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout