Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 700

பொருட்பால்அங்கவியல்70. மன்னரைச் சேர்ந்தொழுதல்

பழையம் எனக்கருதிப் பண்பல்ல செய்யும்கெழுதகைமை கேடு தரும்.

pazhaiyam enakkarutip paNpalla seyyumkezhutakaimai kETu tarum

Edwin Rajesh

பொருள் / உரை

முருகா எளிய உரை

'மன்னரோடு நாம் நெடுங்காலமாகப் பழகிய பழைய நண்பர்' என்று எண்ணித் தகுதியற்ற தகாத செயல்களைச் செய்ய உரிமை எடுத்துக் கொள்வது, ஒருவருக்குப் பெருங்கேட்டையும் அழிவையும் உண்டாக்கும்.

• பழையம் எனக்கருதி பண்பல்ல செய்யும் = பழைய நட்பு என்று எண்ணி தகாத செயல்களைச் செய்யும்,• கெழுதகைமை கேடு தரும் = எல்லைமீறிய உரிமை எடுக்கும் மனப்பான்மை பெரும் கேட்டையே தரும்.

மு.வரதராசன்

யாம் அரசர்க்கு பழைமையானவராய் உள்ளோம் எனக்கருதித் தகுதி அல்லாதவற்றைச் செய்யும் உரிமை கேட்டைத்தரும்.

பரிமேலழகர்

பழையம் எனக்கருதிப் பண்பு அல்ல செய்யும் கெழுதகைமை - அரசனுக்கு யாம் பழையம் எனக் கருதித் தமக்கு இயல்பு அல்லாதவற்றைச் செய்யும் உரிமை; கேடு தரும் - அமைச்சர்க்குக் கேட்டினைப் பயக்கும். (அவன் பொறாது செறும் பொழுதின், அப்பழைமை நோக்கிக் கண்ணோடாது உயிரை வௌவுதலான், அவன் வேண்டாதன செய்தற்கு ஏதுவாய கெழுதகைமை கேடு தரும் என்றார். இவை மூன்று பாட்டானும், பொறுப்பர் என்று அரசர் வெறுப்பன செய்யற்க என்பது கூறப்பட்டது.)

சாலமன் பாப்பையா

ஆட்சியாளருடன் நமக்கு நீண்ட நாள் பழக்கம் உண்டு என்று எண்ணித் தீய செயல்களைச் செய்யும் மனஉரிமை ஒருவருக்குக் கெடுதியையே தரும்.

Meaning in English

Who think 'We're ancient friends' and do unseemly things; To these familiarity sure ruin brings

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout