குறிப்பறிந்து காலங் கருதி வெறுப்பிலவேண்டுப வேட்பச் சொலல்.
kuRippaRintu kAlang karuti veRuppilavENTupa vETpas solal
S. P. Sundar
பொருள் / உரை
முருகா எளிய உரை
மன்னரின் மனநிலையை அறிந்து, தகுந்த காலத்தை எதிர்பார்த்து, அவருக்கு வெறுப்புத் தராத சொற்களால், நாட்டுக்கு அவசியமான நற்காரியங்களை அவர் விரும்பி ஏற்குமாறு இதமாக எடுத்துரைக்க வேண்டும்.
• குறிப்பறிந்து காலங்கருதி வெறுப்பில = மன்னரின் மனக்குறிப்பை உணர்ந்து, தக்க காலம் பார்த்து, வெறுப்பில்லாத சொற்களால்,• வேண்டுப வேட்பச் சொலல் = தேவையானவற்றை மன்னர் ஏற்குமாறு இதமாக உரைக்க வேண்டும்.
Murugaa simple commentary
Knowing the king's state of mind, awaiting the appropriate time, with words that do not cause him displeasure, one must pleasantly present the good deeds necessary for the country so that he willingly accepts them.
• Knowing the intention, considering the time, without resentment = Understanding the king's inner intention, observing the appropriate time, with words devoid of resentment,• Speaking the necessary things pleasingly = one must speak pleasantly of the necessary things so that the king accepts them.
Machine translation from the Tamil
மு.வரதராசன்
அரசருடையக் குறிப்பை அறிந்து தக்கக் காலத்தை எதிர்நோக்கி, வெறுப்பில்லாதவற்றையும் விருப்பமானவற்றையும் அவர் விரும்புமாறுச் சொல்ல வேண்டும்.
பரிமேலழகர்
குறிப்பு அறிந்து - அரசனுக்குக் காரியஞ் சொல்லுங்கால் அப்பொழுது நிகழ்கி்ன்ற அவன் குறிப்பினை அறிந்து; காலம் கருதி- சொல்லுதற்கு ஏற்ற காலத்தையும் நோக்கி; வெறுப்பு இலவேண்டுப வேட்பச் சொலல் - வெறுப்பிலவுமாய் வேண்டுவனவுமாய காரியங்களை அவன் விரும்பும் வகை சொல்லுக. (குறிப்புக் காரியத்தின்கண் அன்றிக் காம வெகுளியுள்ளிட்டவற்றின் நிகழ்வுழியும் அதற்கு ஏலாக் காலத்தும் சொல்லுதல் பயனின்றாகலின் 'குறிப்பு அறிந்து காலம் கருதி' என்றும், அவன் உடம்படாதன முடிவு போகாமையின் 'வெறுப்பில' என்றும், பயனிலவும் பயன் சுருங்கியவும் செய்தல் வேணடாமையின் 'வேண்டுப' என்றும், அவற்றை இனியவாய்ச் சுருங்கி விளங்கிய பொருளவாய சொற்களால் சொல்லுக என்பார் 'வேட்பச் சொலல்' என்றும் கூறினார்.)
Parimelazhagar
Knowing the disposition, when speaking of a matter to the king, knowing his disposition that prevails at that time; considering the time, and looking for a time suitable for speaking; speaking desirably what is not hateful and what is needed, speak of matters that are not hateful and that are needed, in a manner that he desires. (Because speaking when his disposition is not on the matter, but is engaged in desire, anger, and the like, and at a time unsuitable for it, is fruitless, he said 'knowing the disposition and considering the time', and because things to which he does not agree will not reach completion, he said 'what is not hateful', and because things without benefit and things of small benefit need not be done, he said 'what is needed', and meaning that one should speak of them in words that are sweet, brief, and of clear meaning, he said 'speaking desirably'.)
Machine translation from the Tamil
சாலமன் பாப்பையா
ஆட்சியாளருக்கு எதையேனும் சொல்ல விரும்பினால், ஆட்சியாளரின் அப்போதைய மனநிலையை அறிந்து தான் சொல்லக் கருதிய செய்திக்கு ஏற்ற சமயத்தையும் எண்ணி ஆட்சியாளருக்கு வெறுப்புத் தராததும், வேண்டியதும் ஆகிய காரியத்தை அவர் விரும்புமாறு சொல்லுக.
Meaning in English
Knowing the signs, waiting for fitting time, with courteous care, Things not displeasing, needful things, declare

