Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 695

பொருட்பால்அங்கவியல்70. மன்னரைச் சேர்ந்தொழுதல்

எப்பொருளும் ஓரார் தொடரார்மற் றப்பொருளைவிட்டக்கால் கேட்க மறை.

epporuLum OrAr toTarArmaR RapporuLaiviTTakkAR kETka maRai

Richard Raj

பொருள் / உரை

முருகா எளிய உரை

மன்னர் பிறரிடம் ரகசியம் பேசும் போது அதை ஒட்டுக் கேட்க முயலக் கூடாது; அது என்னவென்று துருவிக் கேட்கவும் கூடாது; மன்னரே விரும்பி வெளிப்படுத்தினால் மட்டுமே அதைக் கேட்டுக் கொள்ள வேண்டும்.

• எப்பொருளும் ஓரார் தொடரார் = ரகசியத்தை ஒட்டுக் கேட்காமலும் துருவிக் கேட்காமலும் இருத்தல் வேண்டும்;• மற்றப்பொருளை விட்டக்கால் கேட்க மறை = மன்னரே விரும்பிச் சொன்னால் மட்டுமே அந்த ரகசியத்தைக் கேட்க வேண்டும்.

மு.வரதராசன்

(அரசர் மறைபொருள் பேசும் போது) எப்பொருளையும் உற்றுக் கேட்காமல் தொடர்ந்து வினவாமல் அப்பொருளை அவரே விட்டுச் சொன்னபோது கேட்டறிய வேண்டும்.

பரிமேலழகர்

மறை - அரசனுக்குப் பிறரோடு மறை நிகழ்வுழி; எப்பொருளும் ஓரார் - யாதொரு பொருளையும் செவி கொடுத்துக் கொள்ளாது; தொடரார் - அவனை முடுகி வினவுவதும் செய்யாது; அப்பொருளை விட்டக்கால் கேட்க - அம்மறைப் பொருளை அவன் தானே அடக்காது சொல்லியக்கால் கேட்க. ('ஓர்தற்கு ஏற்கும் பொருளாயினும்' என்பார், 'எப்பொருளும்' என்றார். 'மற்று' வினை மாற்றின் கண் வந்தது.)

சாலமன் பாப்பையா

ஆட்சியாளர் பிறருடன் ரகசியம் பேசம்போது காதுகொடுத்துக் கேட்காதே; என்ன பேச்சு என்று நீயாகக் கேளாதே; அதைப் பற்றி ஆட்சியாளரே சொன்னால் கேட்டுக் கொள்க.

Meaning in English

Seek not, ask not, the secret of the king to hear; But if he lets the matter forth, give ear

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout