Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 694

பொருட்பால்அங்கவியல்70. மன்னரைச் சேர்ந்தொழுதல்

செவிச்சொல்லும் சேர்ந்த நகையும் அவித்தொழுகல்ஆன்ற பெரியா ரகத்து.

sevissollunj sErnta nakaiyum avittozhukalAnRa periyA rakattu

Harini Iyer

பொருள் / உரை

முருகா எளிய உரை

அரசர் மற்றும் பெரியவர்களின் முன்னிலையில் இருக்கும்போது, பிறர் காதில் ரகசியம் பேசுவதையும், மற்றவரைப் பார்த்துச் சிரிப்பதையும் முற்றிலும் தவிர்த்து அடக்கத்தோடு நடந்து கொள்ள வேண்டும்.

• ஆன்ற பெரியாரகத்து = அரசர் மற்றும் பெரியவர்களின் முன்னிலையில்,• செவிச்சொல்லும் சேர்ந்த நகையும் அவித்தொழுகல் = காதில் ரகசியம் பேசுவதையும் சிரிப்பதையும் தவிர்த்து அடக்கமாய் வாழ்க.

மு.வரதராசன்

வல்லமை அமைந்த பெரியாரிடத்தில் (மற்றொருவன்) செவியை நெருங்கிச் சொல்லுதல் உடன் சேர்ந்து நகைத்தலும் செய்யாமல் ஒழுகவேண்டும்.

பரிமேலழகர்

ஆன்ற பெரியாரகத்து - அமைந்த அரசர் அருகு இருந்தால்; செவிச்சொல்லும் சேர்ந்த நகையும் அவித்து ஒழுகல் - அவர் காண ஒருவன் செவிக்கண் சொல்லுதலையும் ஒருவன் முகம் நோக்கி நகுதலையும் தவிர்த்து ஒழுகுக. (சேர்தல்: பிறனொடு சேர்தல். செய்தொழுகின், தம் குற்றம் கண்டு செய்தனவாகக் கொள்வர் என்பது கருத்து.)

சாலமன் பாப்பையா

மேன்மை மிக்க பெரியவர் அருகே இருக்கும்போது, பிறருடன் காதருகே மெல்லப் பேசுவதையும் அடுத்தவர் முகம் பார்த்துக் கண்சிமிட்டிச் சிரிப்பதையும் செய்யாது நடந்துகொள்க.

Meaning in English

All whispered words and interchange of smiles repress, In presence of the men who kingly power possess

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout