மன்னர் விழைப விழையாமை மன்னரால்மன்னிய ஆக்கந் தரும்.
mannar vizhaipa vizhaiyAmai mannarAnmanniya Akkan tarum
Varshan
பொருள் / உரை
முருகா எளிய உரை
மன்னர்கள் தமக்கென விரும்பும் தனித்துவமான சிறப்புரிமைகளையும் ஆடம்பரங்களையும் தமக்கு வேண்டும் என ஆசைப்படாமல் இருப்பது, அம்மன்னராலேயே தமக்கு நிலைத்த செல்வத்தையும் மதிப்பையும் பெற்றுத் தரும்.
• மன்னர் விழைப விழையாமை = மன்னர் விரும்பும் ஆடம்பரங்களை தாம் விரும்பாதிருத்தல்,• மன்னரால் மன்னிய ஆக்கந்தரும் = மன்னராலேயே நிலைத்த பெருஞ்செல்வத்தைப் பெற்றுத் தரும்.
Murugaa simple commentary
Not desiring for oneself the unique privileges and luxuries that kings desire for themselves will yield lasting wealth and respect through those kings themselves.
• Not desiring what the king desires = Oneself not desiring the luxuries that the king desires,• Yields enduring prosperity through the king = Will yield lasting great wealth through the king himself.
Machine translation from the Tamil
மு.வரதராசன்
அரசர் விரும்புகின்றவர்களைத் தாம் விரும்பாமலிருத்தல் (அரசரைச் சார்ந்திருப்பவர்க்கு) அரசரால் நிலையான ஆக்கத்தைப் பெற்றுத் தரும்.
பரிமேலழகர்
மன்னர் விழைப விழையாமை - தம்மால் சேரப்பட்ட மன்னர் விரும்புவனவற்றைத் தாம் விரும்பாதொழிதல்; மன்னரான் மன்னிய ஆக்கம் தரும் - அமைச்சர்க்கு அவரானே நிலைபெற்ற செல்வத்தைக் கொடுக்கும். (ஈண்டு 'விழைப' என்றது அவர்க்குச் சிறப்பாக உரியவற்றை. அவை: நுகரப்படுவன, ஒப்பனை, மேன்மை என்றிவை முதலாயின. இவற்றை ஒப்பிற்கு அஞ்சித் தாம் விழையா தொழியவே, அவ்வச்சம் நோக்கி உவந்து,அவர்தாமே எல்லாச் செல்வமும் நல்குவார் என்பது கருத்து. எனவே, அவற்றை விரும்பின் கேடு தரும் என்பதாம்.)
Parimelazhagar
Not desiring what kings desire, abstaining from desiring the things desired by the kings whom one has joined; will bring enduring wealth through the king, will give the ministers lasting wealth through him alone. (Here, 'the things desired' refers to the things that specially belong to them. They are: objects of enjoyment, adornment, eminence, and the like. The idea is that when they abstain from desiring these out of fear of equalling him, he himself, pleased on seeing that fear, will bestow all wealth. Therefore, it means that desiring them will bring ruin.)
Machine translation from the Tamil
சாலமன் பாப்பையா
ஆட்சியாளருடன் பழகுபவர் ஆட்சியாளர் எவற்றை விரும்புகிறாரோ அவற்றை விரும்பாமல் இருப்பது, அவருக்கு ஆட்சியாளரால் நிலைத்த செல்வத்தைக் கொடுக்கும்.
Meaning in English
To those who prize not state that kings are wont to prize, The king himself abundant wealth supplies

