ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்சான்றோன் எனக்கேட்ட தாய்.
InRa pozhutin perituvakkum tanmakanaissAnROn enakkETTa tAy
Amirthavarshini
பொருள் / உரை
முருகா எளிய உரை
தாய் தன்மகனைச் சான்றோன் என்றே கேட்டாளே!புகழ்ந்திடும் அச்சொல்லை அன்னை கேட்டாளே!ஈன்றநாள் மகிழ்ச்சி விடப் பெருகுமே!பேரானந்தம் தாயின் நெஞ்சில் பெருகுமே!
• தன் மகனை = தன் மகனை• சான்றோன் எனக் கேட்ட = நற்குணங்களும் கல்வியும் நிறைந்த 'சான்றோன்' என்று அறிஞர்கள் புகழக் கேட்ட• தாய் = தாயானவள்,• ஈன்ற பொழுதின் = தான் அவனைப் பெற்றெடுத்த நாளில் அடைந்த மகிழ்ச்சியை விட• பெரிது உவக்கும் = மிகவும் அதிகமாகப் பேரானந்தம் அடைவாள்.
மு.வரதராசன்
தன் மகனை நற்பண்பு நிறைந்தவன் என பிறர் சொல்லக் கேள்வியுற்ற தாய், தான் அவனை பெற்றக் காலத்தில் உற்ற மகிழ்ச்சியை விடப் பெரிதும் மகிழ்வாள்.
பரிமேலழகர்
ஈன்ற பொழுதின் பெரிது உவக்கும் - தான் பெற்ற பொழுதை மகிழ்ச்சியினும் மிக மகிழும்; தன் மகனைச்சான்றோன் எனக் கேட்ட தாய் - தன் மகனைக் கல்வி கேள்விகளால் நிறைந்தான் என்று அறிவுடையோர் சொல்லக் கேட்ட தாய். (கவானின் கண்கண்ட பொது உவகையினும் சால்புடையான் எனக்கேட்ட சிறப்பு உவகை பெரிதாகலின், 'பெரிது உவக்கும்' எனவும், 'பெண்ணியல்பால் தானாக அறியாமையின் கேட்ட தாய்' எனவும் கூறினார். அறிவுடையார் என்பது வருவிக்கப்பட்டது. சான்றோன் என்றற்கு உரியர் அவர் ஆகலின். தாய் உவகைக்கு அளவு இன்மையின் அஃது இதனான் பிரித்துக் கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா
தம் மகனைக் கல்வி ஒழுக்கங்களால் நிறைந்தவன் என்று அறிவுடையோர் கூற அதைக் கேட்ட தாய், அவனைப் பெற்ற பொழுதைக் காட்டிலும் மிகுதியாக மகிழ்வாள்.
Meaning in English
When mother hears him named 'fulfill'd of wisdom's lore,' Far greater joy she feels, than when her son she bore





