தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்துமன்னுயிர்க் கெல்லாம் இனிது.
tammintam makkaL aRivuTaimai mAnilattumannuyirk kellAm initu
SuccessKarthick
பொருள் / உரை
முருகா எளிய உரை
மக்கள் அறிவில் பெற்றோர் மிஞ்சல் இன்பமே!பெற்றோருக்குத் தரும்பெரும் பேரின்பமே!அதைவிட மேலாய் உலகுயிர்க் கெல்லாம்!பேரின்பம் அடையும் இம்மாநிலம் எல்லாம்!
• தம் மக்கள் = தம்முடைய பிள்ளைகள்• அறிவுடைமை = தம்மை விடவும் பேரறிவுடையவர்களாகத் திகழ்வது,• தம்மின் = பெற்றோருக்குத் தரும் இன்பத்தைக் காட்டிலும்,• மாநிலத்து = இப்பெரிய உலகத்தில் வாழ்கின்ற• மன்னுயிர்க்கு எல்லாம் = மக்கள் மற்றும் எல்லா உயிர்களுக்கும்• இனிது = மிகுந்த நன்மையையும் இன்பத்தையும் தரும்.
மு.வரதராசன்
தம் மக்களின் அறிவுடைமை தமக்கு இன்பம் பயப்பதை விட உலகத்து உயிர்களுக்கேல்லாம் மிகுந்த இன்பம் பயப்பதாகும்.
பரிமேலழகர்
தம் மக்கள் அறிவுடைமை - தம் மக்களது அறிவுடைமை; மாநிலத்து மன்உயிர்க்கு எல்லாம் தம்மின் இனிது - பெரிய நிலத்து மன்னா நின்ற உயிர்கட்கு எல்லாம் தம்மினும் இனிது ஆம். (ஈண்டு 'அறிவு' என்றது இயல்பாகிய அறிவோடு கூடிய கல்வியறிவினை. 'மன்னுயிர்' என்றது ஈண்டு அறிவுடையார் மேல் நின்றது. அறிவுடைமை கண்டு இன்புறுதற்கு உரியார் அவராகலின். இதனான் தந்தையினும் அவையத்தார் உவப்பர் என்பது கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா
தம் பிள்ளைகள் அறிவு மிக்கவராக இருப்பது, தம்மைக் காட்டிலும், இப்பெரிய பூமியில் அழியாமல் தொடரும் உயிர்களுக்கு எல்லாம் இனிது.
Meaning in English
Their children's wisdom greater than their own confessed, Through the wide world is sweet to every human breast





