Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 689

பொருட்பால்அங்கவியல்69. தூது

விடுமாற்றம் வேந்தர்க்கு உரைப்பான் வடுமாற்றம்வாய்சேரா வன்கணவன்.

viTumARRam vEntark kuraippAn vaTumARRamvAysOrA vanka Navan

Vishnu Priya Ravendiran

பொருள் / உரை

முருகா எளிய உரை

தன் அரசன் சொல்லி அனுப்பிய செய்தியை மாற்றரசரிடம் உரைப்பவன், எத்தகைய ஆபத்துகளுக்கு அஞ்சியும் தன் நாட்டுக்குப் பழி தரும் சொற்களை வாய் தவறியும் பேசாத அசைக்க முடியாத மன உறுதி கொண்டவனாக இருக்க வேண்டும்.

• விடுமாற்றம் வேந்தர்க்கு உரைப்பான் = மன்னன் சொல்லி அனுப்பிய செய்தியை மாற்றரசரிடம் உரைப்பவன்,• வடுமாற்றம் வாய்சோரா வன்கணவன் = பழி தரும் சொற்களை வாய் தவறியும் கூறாத மன உறுதி கொண்டவன்.

மு.வரதராசன்

குற்றமானச் சொற்களை வாய் சோர்ந்தும் சொல்லாத உறுதி உடையவனே அரசன் சொல்லியனுப்பிய சொற்களை மற்ற வேந்தர்க்கு உரைக்கும் தகுதியுடையவன்.

பரிமேலழகர்

விடு மாற்றம் வேந்தர்க்கு உரைப்பான் - தன்னரசன் சொல்லிவிட்ட வார்த்தையை வேற்றசர்க்குச் சென்று சொல்ல உரியான்; வடுமாற்றம் வாய்சோரா வன்கணவன் - தனக்கு வரும் ஏதத்திற் கஞ்சி அவனுக்குத் தாழ்வான வார்த்தையை வாய் சோர்ந்தும் சொல்லாத திண்மையை உடையான். (தாழ்வு சாதி தருமமன்மையின், 'வடு' என்றார். 'வாய்சோரா' எனக் காரியம் காரணத்துள் அடக்கப்பட்டது.)

சாலமன் பாப்பையா

தம் அரசு சொல்லிவிட்ட செய்தியை அடுத்த அரசிடம் சொல்பவன், அங்கே சந்திக்க நேரும் ஆபத்திற்கு அஞ்சி, வாய் தவறியும் தவறான செய்தியையோ, இழிவான சொற்களையோ சொல்லிவிடாத ஆற்றல் பெற்றவனாக இருக்க வேண்டும்.

Meaning in English

His faltering lips must utter no unworthy thing, Who stands, with steady eye, to speak the mandates of his king

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout