தூய்மை துணைமை துணிவுடைமை இம்மூன்றின்வாய்மை வழியுரைப்பான் பண்பு.
tUymai tuNaimai tuNivuTaimai immUnRinvAymai vazhiyuraippAn paNpu
Sabari
பொருள் / உரை
முருகா எளிய உரை
ஆசைகளுக்கு உட்படாத ஒழுக்கத் தூய்மை, மாற்றரசரின் அமைச்சர்களைத் துணையாக்கிக் கொள்ளும் இணக்கம், எதற்கும் அஞ்சாத நெஞ்சுரம் ஆகிய இம்மூன்றையும் பெற்றிருப்பதே மன்னன் கூறிய செய்தியை அப்படியே உரைக்கும் தூதுவருக்குரிய சிறந்த இலக்கணமாகும்.
• தூய்மை துணைமை துணிவுடைமை இம்மூன்றின் வாய்மை = ஒழுக்கத் தூய்மை, நட்புத் துணை, அஞ்சா நெஞ்சுரம் ஆகிய மூன்றும் உண்மையாய்ப் பெறுவதே,• வழியுரைப்பான் பண்பு = மன்னனின் செய்தியைப் பிசகாமல் உரைக்கும் தூதரின் இலக்கணமாகும்.
மு.வரதராசன்
தூய ஒழுக்கம் உடையவனாதல், துணை உடையவனாதல், துணிவு உடையவனாதல் இந்த மூன்றும் வாய்த்திருத்தலே தூது உரைப்பவனுடைய தகுதியாகும்.
பரிமேலழகர்
வழி உரைப்பான் பண்பு=தன் அரசன் வார்த்தையை அவன் சொல்லியவாறே வேற்றரசர்க்குச் சென்று சொல்லுவானது இலக்கணமாவன; தூய்மை= பொருள் காமங்களான் தூயனாதலும்; துணைமை= தனக்கு அவர்அமைச்சர் துணையாந் தன்மையும்; துணிவுடைமை= துணிதல்உடைமையு்ம்; இம்மூன்றின் வாய்மை= இம்மூன்றோடு கூடிய மெய்ம்மையும் என இவை.
சாலமன் பாப்பையா
பணத்தின் மீதும் அயல் பெண்கள் மீதும் ஆசை இல்லாமல் இருக்கும் நேர்மை, அடுத்த அரசின் அமைச்சர்களின் துணை, நல்லனவே எண்ணிச் செய்யும் துணிவு இம் மூன்றையும் உண்மையாகவே பெற்றிருப்பதே கூறியது கூறும் தூதரின் பண்பு.
Meaning in English
Integrity, resources, soul determined, truthfulnessWho rightly speaks his message must these marks possess





