Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 686

பொருட்பால்அங்கவியல்69. தூது

கற்றுக்கண் அஞ்சான் செலச்சொல்லிக் காலத்தால்தக்கது அறிவதாம் தூது.

kaRRukkaN anjsAn selassollik kAlattAltakka taRivatAn tUtu

Shasha Tirupati

பொருள் / உரை

முருகா எளிய உரை

நீதிநூல்களைக் கற்றுத் தேர்ந்து, மாற்றரசரின் சினப் பார்வைக்கு அஞ்சாமல், தான் சொல்ல வந்ததை அவர் மனதில் பதியுமாறு உரைத்து, காலச் சூழலுக்கு ஏற்பத் தக்க உபாயத்தை அறிபவனே சிறந்த தூதனாவான்.

• கற்று கண் அஞ்சான் = நீதிநூல்களைக் கற்று, பகைவரின் சீற்றப் பார்வைக்கு அஞ்சாமல்,• செலச்சொல்லிக் காலத்தால் தக்கதறிவதாம் தூது = கருத்தை மனதில் பதிய வைத்து, காலத்திற்கேற்ற உபாயம் அறிபவனே தூதனாவான்.

மு.வரதராசன்

கற்பன கற்று, பிறருடைய பகையான பார்வைக்கு அஞ்சாமல் கேட்பவர் உள்ளத்தில் பதியுமாறு சொல்லி, காலத்திற்க்குப் பொருத்தமானதை அறிகின்றவனே தூதன்.

பரிமேலழகர்

கற்று -நீதி நூல்களைக் கற்று; செலச்சொல்லி - தான் சென்ற கருமத்தைப் பகை வேந்தர் மனங்கொளச் சொல்லி; கண் அஞ்சான் - அவர் செயிர்த்து நோக்கின் அந்நோக்கிற்கு அஞ்சாது; காலத்தால் தக்கது அறிவது தூதாம் - காலத்தோடு பொருந்த அது முடிக்கத்தக்க உபாயம் அறிவானே தூதனாவான். (அவ்வுபாயம் அறிதற் பொருட்டு நீதி நூற்கல்வியும், அதனானன்றிப் பிறிதொன்றான் முடியுங்காலம் வரின் அவ்வாறு முடிக்கவேணடுதலின் காலத்தால் தக்கது அறிதலும், இலக்கணமாயின.)

சாலமன் பாப்பையா

அனைத்து நூல்களையும் கற்றதோடு மட்டும் அல்லாமல், பகை அரசு மனங்கொள்ளுமாறு அவற்றைச் சொல்லவும், ஏற்காதவர் சினந்தால் அவர் பார்வைக்கு அஞ்சாமல், ஏற்பச் செய்யத் தக்க தந்திரவழியை அறிவதும் தூதரின் பண்பாகும்.

Meaning in English

An envoy meet is he, well-learned, of fearless eye Who speaks right home, prepared for each emergency

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout