Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 683

பொருட்பால்அங்கவியல்69. தூது

நூலாருள் நூல்வல்லன் ஆகுதல் வேலாருள்வென்றி வினையுரைப்பான் பண்பு.

nUlAruL nUlvallan Akutal vElAruLvenRi vinaiyuraippAn paNpu

Kurale Kavithaiyai

பொருள் / உரை

முருகா எளிய உரை

படைபலமிக்க மாற்றரசரின் அவைக்குச் சென்று தன் நாட்டுக்கு வெற்றி தேடித்தரும் தூதுவருக்குரிய சிறந்த பண்பாவது, நீதிநூல்களைக் கற்ற அறிஞர்களிலேயே தலைசிறந்த வல்லவனாக விளங்குவதேயாகும்.

• வேலாருள் வென்றி வினையுரைப்பான் பண்பு = மாற்றரசரிடம் சென்று நாட்டுக்கு வெற்றி தரும் தூதுரைப்பவரின் பண்பானது,• நூலாருள் நூல்வல்லன் ஆகுதல் = நீதிநூல் கற்ற அறிஞர்களிடையே தலைசிறந்த வல்லவனாக விளங்குவதே.

மு.வரதராசன்

அரசனிடம் சென்று தன் அரசனுடைய வெற்றிக்கு காரணமானச் செயலைப் பற்றித் தூது உரைப்பவன் திறம் நூலறிந்தவருள் நூல் வல்லவனாக விளங்குதல் ஆகும்.

பரிமேலழகர்

வேலாருள் வென்றி வினை உரைப்பான் பண்பு - வேலையுடைய வேற்றரசரிடைச் சென்று தன் அரசனுக்கு வென்றி தரும் வினையைச் சொல்லுவானுக்கு இலக்கணமாவது; நூலாருள் நூல் வல்லன் ஆகுதல் - நீதி நூலையுணர்ந்த அமைச்சரிடைத் தான் அந்நூலை வல்லனாதல். ('கோறல் மாலையர்' என்பது தோன்ற 'வேலார்' என்றும், தூது வினை இரண்டும் அடங்க 'வென்றி வினை' என்றும் கூறினார். வல்லனாதல்: உணர்வு மாத்திரமுடையராய அவர் முன் வகுக்கும் ஆற்றல் உடையனாதல்.)

சாலமன் பாப்பையா

அனைத்து அரசியல் அறத்தை, நீதி நூல்களை அறிந்தவர்களுக்குள்ளே அதிகம் அறிந்தவனாய் ஆவது, ஆயுதபலம் கொண்ட பகை அரசரிடையே, தன் நாட்டுக்கு நலம் தேடிச் செல்லும் தூதரின் பண்பாகும்.

Meaning in English

Mighty in lore amongst the learned must he be, Midst jav'lin-bearing kings who speaks the words of victory

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout