Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 682

பொருட்பால்அங்கவியல்69. தூது

அன்பறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க்குஇன்றி யமையாத மூன்று.

anpaRi vArAynta solvanmai tUturaippArkkinRi yamaiyAta mUnRu

Geethapriya

பொருள் / உரை

முருகா எளிய உரை

நாட்டின் மீது அன்புடைமை, சூழலுக்கு ஏற்ப நன்மை அறியும் அறிவுடைமை, மாற்றரசரிடம் ஆராய்ந்து பேசும் சொல்வன்மை ஆகிய மூன்றும் தூதுவருக்கு மிகவும் இன்றியமையாத நற்குணங்களாகும்.

• அன்பு அறிவு ஆராய்ந்த சொல்வன்மை = நாட்டின் மீதான அன்பு, கூர்ந்த அறிவு, ஆராய்ந்து பேசும் சொல்வன்மை ஆகிய,• தூதுரைப்பார்க்கு இன்றியமையாத மூன்று = இந்த மூன்றும் தூதுவருக்கு இன்றியமையாத பண்புகளாகும்.

மு.வரதராசன்

அன்பு, அறிவு, ஆராய்ந்து சொல்கின்ற சொல் வன்மை ஆகிய இவை மூன்றும் தூது உரைப்பவர்க்கு இன்றியமையாத மூன்று பண்புகளாகும்.

பரிமேலழகர்

அன்பு - தம் அரசன் மாட்டு அன்புடைமையும்; அறிவு - அவனுக்கு ஆவன அறியும் அறிவுடைமையும்; ஆராய்ந்த சொல் வன்மை - அவற்றை வேற்றரசரிடைச் சொல்லுங்கால் ஆராய்ந்து சொல்லுதல் வன்மையும் என; தூது உரைப்பார்க்கு இன்றியமையாத மூன்று - தூதுரைக்க உரியார்க்கு இன்றியமையாத குணங்கள் மூன்று. (ஆராய்தல்: அவற்றிற்கு உடம்படுஞ் சொற்களைத் தெரிதல். 'இன்றியமையாத மூன்று' எனவே அமைச்சர்க்குச் சொல்லிய பிற குணங்களும் வேண்டும் என்பது பெற்றாம். இவை இரண்டு பாட்டானும் இரு வகையார்க்கும் பொது இலக்கணம் கூறப்பட்டது.)

சாலமன் பாப்பையா

அன்பு நாட்டிற்கு நல்லது அறியும் அறிவு, அடுத்தவரிடம் பேசும்போது தேர்ந்து எண்ணிச் சொல்லும் சொல்லாற்றல் இவை மூன்றும் தூதர்க்கு இன்றியமையாதன.

Meaning in English

Love, knowledge, power of chosen words, three things, Should he possess who speaks the words of kings

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout