Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 681

பொருட்பால்அங்கவியல்69. தூது

அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம்பண்புடைமை தூதுரைப்பான் பண்பு.

anpuTaimai AnRa kuTippiRattal vEntavAmpaNpuTaimai tUturaippAn paNpu

Roshann Deva

பொருள் / உரை

முருகா எளிய உரை

நாட்டு மக்கள் மீது அன்பு கொண்டிருத்தல், ஒழுக்கம் நிறைந்த நற்குடிப் பிறப்பு, அரசர்கள் அனைவரும் விரும்பும் நற்பண்புகளைப் பெற்றிருத்தல் ஆகியவையே தூதுவருக்குரிய சிறந்த தகுதிகளாகும்.

• அன்புடைமை = மக்கள் மீது அன்புடையவராக இருத்தல்,• ஆன்ற குடிப்பிறத்தல் = பண்பார்ந்த சிறந்த குடிப்பிறப்பு,• வேந்தவாம் பண்புடைமை தூதுரைப்பான் பண்பு = மன்னர்கள் விரும்பும் நற்பண்பைப் பெற்றிருப்பதே தூதரின் தகுதியாகும்.

மு.வரதராசன்

அன்புடையவனாதல், தகுதியானக் குடிப்பிறப்பு உடையவனாதல் அரசர் விரும்பும் சிறந்த பண்பு உடையவனாதல், ஆகிய இவை தூது உரைப்பவனுடையத் தகுதிகள்.

பரிமேலழகர்

அன்பு உடைமை - தன் சுற்றத்தார்மாட்டு அன்புடையனாதலும்; ஆன்ற குடிப்பிறத்தல் - அமைச்சுப் பூணற்கு அமைந்த குடியின்கண் பிறத்தலும்; வேந்து அவாம் பண்பு உடைமை - அரசர் சாதி விரும்பும் பண்புடையன் ஆதலும்; தூது உரைப்பான் பண்பு - தூது வார்த்தை சொல்வானுக்கு இலக்கணம். (முன்னைய இரண்டனாலும், முறையே சுற்றத்தார்க்கும் தீங்கு வாராமல் தான் பேணியொழுகலும்,தன் முன்னோர் தூதியல் கேட்டறிதலும் பெற்றாம், வேந்து அவாம் பண்பு உடைமை முன்னர் மன்னரைச் சோந்தொழுகற்கண் பெறப்படும். அதனால் வேற்றரசரும் அவன் வயத்தராதல் பெறுதும்.)

சாலமன் பாப்பையா

நாட்டு மக்கள், அரசு, உறவு இவற்றின் மீது அன்பும், நற்குணம் நிறைந்த குடிப்பிறப்பும், அரசு விரும்பும் பண்பும் கொண்டிருப்பவரே தூதர்.

Meaning in English

Benevolence high birth, the courtesy kings love:- These qualities the envoy of a king approve

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout