Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 679

பொருட்பால்அங்கவியல்68. வினைசெயல்வகை

நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததேஒட்டாரை ஒட்டிக் கொளல்.

naTTArkku nalla seyalin viraintatEoTTArai oTTik koLal

P. Mahalakshmi

பொருள் / உரை

முருகா எளிய உரை

சொல் பொருள் (பதவுரை):• நட்டார்க்கு நல்ல செயலின் = நண்பர்களுக்கு நல்லுதவி செய்வதை விட,• ஒட்டாரை ஒட்டிக்கொளல் விரைந்ததே = பகைவரைத் தம்முடன் இணக்கமாக்கிக் கொள்வதே விரைந்து செய்யத்தக்கது.எளிய விளக்கம்:ஒரு காரியத்தைச் செய்து முடிக்க நினைப்பவன், தன் நண்பர்களுக்கு நல்லுதவி செய்வதைக் காட்டிலும், தன்னோடு ஒத்துப்போகாத பகைவர்களைத் தம்மோடு இணைத்து நட்பாக்கிக் கொள்வதே மிக விரைந்து செய்ய வேண்டியதாகும்.

மு.வரதராசன்

பகைவராக உள்ளவரைப் பொருந்துமாறு சேர்த்துக் கொள்ளல், நண்பர்க்கு உதவியானவற்றை செய்தலைவிட விரைந்து செய்யத்தக்கதாகும்.

பரிமேலழகர்

நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே - வினை செய்வானால் தன் நட்டார்க்கு இனியவற்றைச் செய்தலினும் விரைந்து செய்யப்படும்; ஒட்டாரை ஒட்டிக் கொடல் - தன் பகைவரோடு ஒட்டாரைத் தனக்கு நட்பாக்கிக் கோடல். (அவ்வினை வாய்த்தற்பயத்தவாய இவ்விரண்டும் பகைவர்க்குத் தன் மெலிவு புலனாவதன் முன்னே செய்க என்பார். 'விரைந்தது' என்றார்; 'விரைந்து செய்யப்படுவது' என்றவாறு. வினைசெய்யும் திறமாகலின் பகைவரோடு ஒட்டாராயிற்று. தன் ஒட்டார் பிறருட்கூடாமல் மாற்றி வைத்தல் எனினும் அமையும்.)

சாலமன் பாப்பையா

ஒரு செயலைச் செய்யும்போது நண்பர்களுக்கு நல்லது செய்வதைக் காட்டிலும் தன் பகைவர்களோடு நட்புக் கொள்வது விரைந்து செய்யப்படவேண்டியது.

Meaning in English

Than kindly acts to friends more urgent thing to do, Is making foes to cling as friends attached to you

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout