Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 674

பொருட்பால்அங்கவியல்68. வினைசெயல்வகை

வினைபகை என்றிரண்டின் எச்சம் நினையுங்கால்தீயெச்சம் போலத் தெறும்.

vinaipakai yenRiraNTin essam ninaiyungkAltIyessam pOlat teRum

Emanda Emmanuel

பொருள் / உரை

முருகா எளிய உரை

சொல் பொருள் (பதவுரை):• வினை பகை என்றிரண்டின் எச்சம் = அரைகுறையாக விட்ட செயலும் பகையின் மிச்சமும்,• நினையுங்கால் தீயெச்சம் போலத் தெறும் = அணைக்காத சிறு நெருப்புப் போல வளர்ந்து அழிக்கும்.எளிய விளக்கம்:முழுமையாக முடிக்காமல் விட்ட செயலின் மிச்சமும், அழிக்காமல் விட்ட பகையின் மிச்சமும், அணைக்காமல் விட்ட சிறு நெருப்புப் பொறி போல வளர்ந்து முடிவில் பெருங்கேட்டை உண்டாக்கி அழிக்கும்.

மு.வரதராசன்

செய்யத்தொடங்கியச் செயல், கொண்ட பகை என்று இவ்விரண்டின் குறை ஆராய்ந்து பார்த்தால், தீயின் குறைபோல் தெரியாமல் வளர்ந்து கெடுக்கும்.

பரிமேலழகர்

வினை பகை என்ற இரண்டின் எச்சம் - செய்யத் தொடங்கிய வினையும் களையத்தொடங்கிய பகையும் என்று சொல்லப்பட்ட இரண்டனது ஒழிவும்; நினையுங்கால் தீயெச்சம் போலத் தெறும் - ஆராயுங்கால் தீயினது ஒழிவு போலப்பின் வளர்ந்து கெடுக்கும். (இனி,இக்குறை என் செய்வது? என்று இகழ்ந்தொழியற்க, முடியச் செய்க என்பதாம், பின் வளர்தல் ஒப்புமைபற்றிப் பகையெச்சமும் உடன் கூறினார். இதனான் வலியான் செய்யுந் திறம் கூறப்பட்டது.)

சாலமன் பாப்பையா

செய்யத் தொடங்கிய செயல், அழிக்கத் தொடங்கிய பகை இவை இரண்டிலும் மிச்சம் இருந்தால் அவை தீயின் மிச்சம் போல வளர்ந்து அழிக்கும் (ஆதலால் எதையும் முழுமையாகச் செய்க)

Meaning in English

With work or foe, when you neglect some little thing, If you reflect, like smouldering fire, 'twill ruin bring

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout