Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 672

பொருட்பால்அங்கவியல்68. வினைசெயல்வகை

தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்கதூங்காது செய்யும் வினை.

tUngkuka tUngkis seyaRpAla tUngkaRkatUngkAtu seyyum vinai

Dr. Shrimaghal

பொருள் / உரை

முருகா எளிய உரை

பொறுத்திருந்து நிதானமாகச் செய்ய வேண்டிய காரியங்களில் அவசரப்படாமல் நிதானிக்க வேண்டும்; உடனடியாக விரைந்து செய்து முடிக்க வேண்டிய அவசரச் செயல்களில் சிறிதும் காலந்தாழ்த்தக் கூடாது.

• தூங்கிச் செயற்பால தூங்குக = நிதானமாகச் செய்ய வேண்டிய செயல்களில் நிதானிக்க வேண்டும்;• தூங்காது செய்யும் வினை தூங்கற்க = விரைந்து செய்ய வேண்டிய செயல்களில் காலந்தாழ்த்தக் கூடாது.

மு.வரதராசன்

காலந்தாழ்த்தி செய்யத் தக்கவற்றைக் காலந்தாழ்ந்தே செய்ய வேண்டும், காலந்தாழ்த்தாமல் விரைந்து செய்யவேண்டிய செயல்களைச் செய்ய காலந்தாழ்த்தக் கூடாது.

பரிமேலழகர்

தூங்கிச் செயற்பால தூங்குக - நீட்டித்துச் செய்யும் பகுதியவாய வினைகளுள் நீட்டிக்க; தூங்காது செய்யும் வினை தூங்கற்க - நீட்டியாது செய்யும் வினைகளுள் நீட்டியாது ஒழிக. (இரு வழியும் இறுதிக்கண் தொக்க ஏழாவது விரிக்கப்பட்டது. இருவகை வினைகளும் வலியானும் காலத்தானும் அறியப்படும். மாறிச்செய்யின், அவை வாயா என்பது கருத்து. மேல் 'தூங்காமை' என்றார்(குறள் 383), ஈண்டதனைப் பகுத்துக் கூறினார். இவை இரண்டு பாட்டானும் பொதுவகையால் வினை செய்யும் திறம் கூறப்பட்டது.)

சாலமன் பாப்பையா

காலந்தாழ்த்திச் செய்யவேண்டிய செயல்கள் என்றால் காலந்தாழ்த்துக; காலம் தாழத்தாது செய்ய வேண்டிய செயல்கள் என்றால் காலம் தாழ்த்த வேண்டா.

Meaning in English

Slumber when sleepy work's in hand beware Thou slumber not when action calls for sleepless care

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout