Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 671

பொருட்பால்அங்கவியல்68. வினைசெயல்வகை

சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவுதாழ்ச்சியுள் தங்குதல் தீது.

sUzhssi muTivu tuNiveytal attuNivutAzhssiyuL tangkutal tItu

Amritha Kumplayil Shobi

பொருள் / உரை

முருகா எளிய உரை

நன்கு ஆராய்ந்து ஆலோசிப்பதன் முடிவானது செயலாற்றுவதற்கான தெளிவான முடிவை எடுப்பதே ஆகும்; அவ்வாறு எடுத்த முடிவைச் செயல்படுத்தாமல் வீணாகக் காலம் தாழ்த்துவது பெரும் தீமையைத் தரும்.

• சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் = ஆலோசனையின் முடிவானது செயலைச் செய்வதற்கான தெளிவை அடைவதே;• அத்துணிவு தாழ்ச்சியுள் தங்குதல் தீது = எடுத்த உறுதியான முடிவைச் செயல்படுத்தாமல் காலம் தாழ்த்துவது தீதாகும்.

மு.வரதராசன்

ஆராய்ந்து எண்ணுவதற்கு எல்லை துணிவு கொள்வதே ஆகும், அவ்வாறு கொண்ட துணிவு காலந் தாழ்த்து நிற்பது குற்றமாகும்.

பரிமேலழகர்

சூழ்ச்சி முடிவு துணிவு எய்தல் - விசாரத்திற்கு எல்லையாவது விசாரிக்கின்றான் 'இனி இது தப்பாது' என்னும் துணிவினைப் பெறுதல்; அத்துணிவு தாழ்ச்சியுள் தங்குதல் தீது - அங்ஙனம் துணிவுபெற்ற வினை. பின் நீட்டிப்பின்கண் தங்குமாயின் அது குற்றமுடைத்து. ('சூழ்ச்சி முடிவு துணிவு எய்தல்' எனவே, துணிவு எய்தும் அளவும் சூழவேண்டும் என்பது பெற்றாம். பின்னர்த் 'துணிவு' ஆகு பெயர். நீட்டிப்பு - செய்யுங் காலத்துச் செய்யாமை. அஃதுள்வழிக் காலக்கழிவாகலானும் பகைவர் அறிந்து அழித்தலானும் முடியாமையின் அதனைத் தீது என்றார்.)

சாலமன் பாப்பையா

ஓர் ஆலோசனையின் முடிவு, செயலைச் செய்யும் துணிவைப் பெறுவதே, பெற்ற அத்துணிவைச் செயலாக்கக் காலம் தாழ்த்தினால் அது தீமையாகும்.

Meaning in English

The Resolve is counsel's end, If resolutions halt In weak delays, still unfulfilled, 'tis grievous fault

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout