துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றிஇன்பம் பயக்கும் வினை.
tunpam uRavarinum seyka tuNivARRiinpam payakkum vinai
Devipriya CH
பொருள் / உரை
முருகா எளிய உரை
சொல் பொருள் (பதவுரை):• துன்பம் உறவரினும் = தொடக்கத்தில் துன்பங்கள் மிக வந்த போதிலும்,• இன்பம் பயக்கும் வினை துணிவாற்றிச் செய்க = முடிவில் இன்பம் தரும் நற்செயலைத் துணிவோடு செய்து முடிக்க வேண்டும்.எளிய விளக்கம்:தொடக்கத்தில் கடுமையான துன்பங்கள் வந்த போதிலும், முடிவிலே நிலைத்த நன்மையையும் இன்பத்தையும் தரும் சிறந்த காரியங்களை மனத்துணிவோடு செய்து முடிக்க வேண்டும்.
மு.வரதராசன்
(முடிவில்) இன்பம் கொடுக்கும் தொழிலைச் செய்யும் போது துன்பம் மிக வந்த போதிலும் துணிவு மேற்கொண்டு செய்து முடிக்க வேண்டும்.
பரிமேலழகர்
துன்பம் உறவரினும் - முதற்கண் மெய்ம்முயற்சியால் தமக்குத் துன்பம் மிக வருமாயினும்; இன்பம் பயக்கும் வினை துணிவு ஆற்றிச் செய்க - அது நோக்கித் தளராது முடிவின்கண் இன்பம் பயக்கும் வினையைத் திட்பமுடையராய்ச் செய்க.(துணிவு - கலங்காமை. அஃதுடையார்க்கு அல்லது கணிகமாய முயற்சித்துன்பம் நோக்காது நிலையுதலுடைய பரிணாமஇன்பத்தை நோக்கிச் செய்தல் கூடாமையின், 'துணிவாற்றிச்செய்க' என்றார். இவை இரண்டு பாட்டானும் அவர் வினைசெய்யுமாறு கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா
ஒரு செயலைச் செய்யும்போது துன்பம் அதிகமாக வந்தாலும் முடிவில் இன்பம் தரும் அச்செயலை மனம் தளராமல் செய்க.
Meaning in English
Though toil and trouble face thee, firm resolve hold fast, And do the deeds that pleasure yield at last





