Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 668

பொருட்பால்அங்கவியல்67. வினைத்திட்பம்

கலங்காது கண்ட வினைக்கண் துளங்காதுதூக்கங் கடிந்து செயல்.

kalangkAtu kaNTa vinaikkaN tuLangkAtutUkkang kaTintu seyal

Murthy

பொருள் / உரை

முருகா எளிய உரை

மனக்குழப்பம் இல்லாமல் தெளிவாக ஆராய்ந்து செய்யத் துணிந்த ஒரு செயலில், இடையில் மனம் தளராமல், காலந்தாழ்த்தாமல் விரைந்து செய்து முடிக்க வேண்டும்.

• கலங்காது கண்ட வினைக்கண் = மனக்குழப்பமின்றித் தெளிவாகத் துணிந்த செயலில்,• துளங்காது தூக்கங்கடிந்து செயல் = தளராமல் தாமதமின்றி விரைந்து செய்து முடிக்க வேண்டும்.

மு.வரதராசன்

மனம் தளராமல் ஆராய்ந்து துணிந்து ஏற்றத் தொழிலைச் சோர்வு கொள்ளாமல் காலந் தாழ்த்தாமல் செய்து முடிக்க வேண்டும்.

பரிமேலழகர்

கலங்காது கண்ட வினைக்கண் - மனந்தெளிந்து செய்வதாகத் துணிந்த வினையின்கண்; துளங்காது தூக்கம் கடிந்து செயல் - பின் அசைதலின்றி நீட்டித்தலை யொழிந்து செய்க. (கலங்கிய வழி ஒழிவதும் செய்வது போலத் தோன்றுமாதலின்,தெளிந்து பலகால் ஆராய்ந்து தாம் செய்வதாக ஓர்த்த வினையைக் 'கலங்காது கண்டவினை' என்றார். துளங்காமை - திட்பம் உடைமை.)

சாலமன் பாப்பையா

மனம் தெளிந்து செய்யத் துணிந்த செயலைத் தடுமாறாமல் தாமதிக்காமல் செய்க.

Meaning in English

What clearly eye discerns as right, with steadfast will, And mind unslumbering, that should man fulfil

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout