Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 666

பொருட்பால்அங்கவியல்67. வினைத்திட்பம்

எண்ணிய எண்ணியாங்கு எய்து எண்ணியார்திண்ணியர் ஆகப் பெறின்.

eNNiya eNNiyAng keytupa eNNiyArtiNNiyar Akap peRin

Harivardhath

பொருள் / உரை

முருகா எளிய உரை

ஒரு நற்காரியத்தைச் செய்ய எண்ணியவர்கள், அச்செயலை முடிப்பதில் அசைக்க முடியாத மன உறுதியோடு செயல்பட்டால், தாங்கள் நினைத்தவற்றை நினைத்தவாறே வெற்றிகரமாக அடைவார்கள்.

• எண்ணியார் திண்ணியராகப் பெறின் = எண்ணியவர் செயலில் தளராத மன உறுதி உடையவரானால்,• எண்ணிய எண்ணியாங்கு எய்துப = அவர் தாம் நினைத்த எல்லாவற்றையும் நினைத்தபடியே அடைவார்.

மு.வரதராசன்

எண்ணியவர் (எண்ணியபடியே செயல் ஆற்றுவதில்) உறுதியுடையவராக இருக்கப்பெற்றால் அவர் எண்ணியவற்றை எண்ணியவாறே அடைவர்.

பரிமேலழகர்

எண்ணிய எண்ணியாங்கு எய்துப - தாம் எய்த எண்ணிய பொருள்கள் எல்லாவற்றையும் அவ்வெண்ணியவாறே எய்துவர்; எண்ணியார் திண்ணியராகப் பெறின் - எண்ணியவர் அவற்றிற்கு வாயிலாகிய வினைக்கண் திண்மையுடையராகப் பெறின்.('எளிதின் எய்துப' என்பார், 'எண்ணியாங்கு எய்துப'என்றார். அவர் அவ்வாறல்லது எண்ணாமையின் திண்ணியராகவே வினை முடியும். அது முடிய அவை யாவையும்கைகூடும் என்பது கருத்து. இதனான் அஃதுடையார் எய்தும்பயன் கூறப்பட்டது.)

சாலமன் பாப்பையா

ஒன்றைச் செய்ய எண்ணியவர் அதைச் செய்து முடிப்பதற்கு ஏற்ற மனஉறுதியை உடையவராக இருந்தால், அடைய நினைத்தவற்றை எல்லாம் அவர் எண்ணப்படியே அடைவார்.

Meaning in English

Whate'er men think, ev'n as they think, may men obtain, If those who think can steadfastness of will retain

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout