Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 665

பொருட்பால்அங்கவியல்67. வினைத்திட்பம்

வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்கண்ஊறெய்தி உள்ளப் படும்.

vIReyti mANTAr vinaittiTpam vEntankaNUReyti uLLap paTum

Sandhya Sundararajan

பொருள் / உரை

முருகா எளிய உரை

சொல் பொருள் (பதவுரை):• வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம் = ஒழுக்கத்தால் மாண்புற்றோரின் செயல் உறுதியானது,• வேந்தன்கண் ஊறெய்தி உள்ளப்படும் = மன்னனுக்கே வெற்றியைத் தந்து அனைவராலும் போற்றப்படும்.எளிய விளக்கம்:உயர்ந்த எண்ணங்களாலும் குணங்களாலும் சிறந்து விளங்கும் சான்றோரின் செயல் உறுதியானது, அரசனுக்கே பெரும் வெற்றியைத் தேடித்தந்து நிலைப்பதால் உலகத்தார் அனைவராலும் பெரிதும் போற்றப்படும்.

மு.வரதராசன்

செயல் திறனால் பெருமைபெற்று உயர்ந்தவரின் வினைத் திட்பமானது நாட்டை ஆளும் அரசனிடத்திலும் எட்டி மதிக்கப்பட்டு விளங்கும்.

பரிமேலழகர்

வீறு எய்தி மாண்டார் வினைத்திட்பம் - எண்ணத்தால் சிறப்பெய்திப் பிற இலக்கணங்களாலும் மாட்சிமைப்பட்ட அமைச்சரது வினைத்திட்பம்; வேந்தன்கண் ஊறு எய்தி உள்ளப்படும் - வேந்தன்கண்ணே உறுதலை எய்தலான், எல்லாரானும் நன்கு மதிக்கப்படும். (வேந்தன்கண் ஊறு எய்தல் - எடுத்த வினை அதனான் முற்றுப்பெற்றுச் செல்வமும் புகழும் அவன் கண்ண ஆதல். 'எய்தலான்' என்பது திரிந்து நின்றது. உள்ளல் - மதிப்பான் மறைவாமை. இதனான் அதன் சிறப்புக் கூறப்பட்டது.)

சாலமன் பாப்பையா

எண்ணங்களால் சிறந்து, பெருமை மிக்கவர்களின் செயல் உறுதி. அரசு வரை செல்வதால் மற்றவர்களாலும் மதிக்கப்படும்.

Meaning in English

The power in act of men renowned and great, With king acceptance finds and fame through all the state

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout