Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 661

பொருட்பால்அங்கவியல்67. வினைத்திட்பம்

வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்மற்றைய எல்லாம் பிற.

vinaittiTpam enpa toruvan manattiTpammaRRaiya ellAm piRa

Maanasa Murugesh

பொருள் / உரை

முருகா எளிய உரை

ஒரு செயலை வெற்றிகரமாக முடிப்பதற்கான உண்மையான செயல் உறுதி என்பது ஒருவனின் அசைக்க முடியாத மன உறுதியே ஆகும்; கருவிகள், வசதிகள் போன்ற மற்றவை எல்லாம் மன உறுதியில்லாத போது பயன்பட மாட்டா.

• வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம் = காரியத்தை முடிக்கும் செயல் உறுதி என்பது மன உறுதியே;• மற்றைய எல்லாம் பிற = மற்ற படைகளும் கருவிகளும் துணைக்கருவிகளே அன்றி உறுதியாகா.

மு.வரதராசன்

ஒரு தொழிலின் திட்பம் என்று சொல்லப்படுவது ஒருவனுடைய மனதின் திட்பமே (உறுதியே) ஆகும், மற்றவை எல்லாம் வேறானவை.

பரிமேலழகர்

வினைத் திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம் - வினைசெய்தற்கண் திண்மை என்று சொல்லப்படுவது அதனை முடித்தற்குரியானொருவன் மனத்தினது திண்மை; மற்றைய எல்லாம் பிற - அஃது ஒழிந்தன எல்லாம் அதற்குத் திண்மை என்று சொல்லப்படா. (ஒழிந்தனவாவன: படை, அரண், நட்பு முதலியவற்றின் திண்மைகள். அவையும் அதற்கு வேண்டுவனவாய் இனமாகலின், 'மற்றைய' என்றும், வேண்டினும் அஃது இல்வழிப் பயனிலவாகலின் 'பிற' என்றும் கூறினார். இதனால் வினைத் திட்பமாவது இன்னது என்பது கூறப்பட்டது.)

சாலமன் பாப்பையா

ஒரு செயலை இடையில் விடாது செய்து முடிப்பதற்கான செயல் உறுதி என்பது ஒருவனின் மன உறுதியே. மற்றவை உறுதி எனப்படமாட்டா.

Meaning in English

What men call 'power in action' know for 'power of mind' Externe to man all other aids you find

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout