Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 66

அறத்துப்பால்இல்லறவியல்7. புதல்வரைப் பெறுதல்

குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்மழலைச்சொல் கேளா தவர்.

kuzhalini tiyAzhini tenpatam makkaLmazhalaissol kELA tavar

Minmini

பொருள் / உரை

முருகா எளிய உரை

மக்கள்தம் மழலைச்சொல் கேளாதவரே!மழலையின் இன்பம் உணராதவரே!குழல்இசை இனிதென்று சொல்லுவரே!யாழிசையும் இனிதென்று சொல்லுவரே!

• தம் மக்கள் = தம்முடைய பிள்ளைகளின்• மழலைச்சொல் = இனிய குதலை மழலை மொழிகளை• கேளாதவர் = கேட்டு அதன் இனிமையை உணராதவர்களே,• குழல் இனிது = புல்லாங்குழலின் இசை இனியது என்றும்,• யாழ் இனிது என்ப = யாழின் இசை இனியது என்றும் கூறுவர்.

மு.வரதராசன்

தம் மக்களின் மழலைச் சொல்லைக் கேட்டு அதன் இனிமையை நுகராதவரே குழலின் இசை இனியது யாழின் இசை இனியது என்று கூறுவர்.

பரிமேலழகர்

குழல் இனிது யாழ் இனிது என்ப - குழலிசை இனிது யாழிசை இனிது என்று சொல்லுவர்; தம் மக்கள் மழலைச் சொல் கேளாதவர் - தம் புதல்வருடைய குதலைச் சொற்களைக் கேளாதவர். ('குழல்', 'யாழ்' என்பன ஆகுபெயர். கேட்டவர் அவற்றினும் மழலைச்சொல் இனிது என்பர் என்பது குறிப்பெச்சம். இனிமை மிகுதிபற்றி மழலைச்சொல்லைச் சிறப்பு வகையானும் கூறியவாறு. இவை மூன்று பாட்டானும் இம்மைப் பயன் கூறப்பட்டது.)

சாலமன் பாப்பையா

பெற்ற பிள்ளைகள் பேசும் பொருளற்ற மழலைச் சொல்லைக் கேட்காதவர்தாம், குழலும் யாழும் கேட்க இனியவை என்பர்.

Meaning in English

'The pipe is sweet,' 'the lute is sweet,' by them't will be averred, Who music of their infants' lisping lips have never heard

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout