Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 65

அறத்துப்பால்இல்லறவியல்7. புதல்வரைப் பெறுதல்

மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர்சொற்கேட்டல் இன்பம் செவிக்கு.

makkaLmey tINTal uTaRkinpam maRRavarsoRkETTal inpam sevikku

Tamil Kadhalan

பொருள் / உரை

முருகா எளிய உரை

மக்கள்தம் மெய்தீண்டல் உடற்கின்பமே!அவர்தம் சொல்கேட்டல் செவிக்கின்பமே!பிள்ளையைத் தழுவிடும் பேரின்பமே!மழலைச்சொல் கேட்பது காதின்பமே!

• மக்கள் மெய் தீண்டல் = தம்முடைய பிள்ளைகளின் உடலைத் தொட்டுத் தழுவுவது• உடற்கு இன்பம் = பெற்றோரின் உடம்பிற்குப் பேரின்பம் தருவதாகும்;• மற்று = மேலும்,• அவர் சொல் கேட்டல் = அப்பிள்ளைகளின் மழலை மற்றும் அறிவுச் சொற்களைக் கேட்பது• செவிக்கு இன்பம் = காதுகளுக்கு அளவற்ற இனிமை தருவதாகும்.

மு.வரதராசன்

மக்களின் உடம்பைத் தொடுதல் உடம்பிற்கு இன்பம் தருவதாகும்: அம் மக்களின் மழலைச் சொற்களைக் கேட்டால் செவிக்கு இன்பம் தருவதாகும்.

பரிமேலழகர்

உடற்கு இன்பம் மக்கள்மெய் தீண்டல் - ஒருவன் மெய்க்கு இன்பமாவது மக்களது மெய்யைத் தீண்டுதல்; செவிக்கு இன்பம் அவர் சொல் கேட்டல் - செவிக்கு இன்பமாவது அவரது சொல்லைக் கேட்டல். ('மற்று' வினைமாற்று. மக்களது மழலைச் சொல்லே அன்றி அவர் கற்றறிவுடையராய்ச் சொல்லுஞ் சொல்லும் இன்பமாகலின், பொதுப்படச் 'சொல்' என்றார். 'தீண்டல்', 'கேட்டல்' என்னும் காரணப்பெயர்கள் ஈண்டுக் காரியங்கள்மேல் நின்றன.)

சாலமன் பாப்பையா

பெற்ற பிள்ளைகளின் உடலைத் தழுவுவது உடலுக்கு இன்பம். அவர்களின் பேச்சைக் கேட்பது காதிற்கு இன்பம்

Meaning in English

To patent sweet the touch of children dear; Their voice is sweetest music to his ear

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout