அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்சிறுகை அளாவிய கூழ்.
amizhtinum ARRa initEtam makkaLsiRukai aLAviya kUzh
Amirthavarshini
பொருள் / உரை
முருகா எளிய உரை
பிள்ளையின் சிறுகை பிசைந்திடும் கூழே!பிஞ்சுக் கரங்களினால் தீண்டிடும் கூழே!அமிழ்தைவிட இனிமை மிகுந்ததே!தேவர் அமுதிலும் சுவை மிகுந்ததே!
• தம் மக்கள் = தம்முடைய பிள்ளைகளின்• சிறுகை அளாவிய = பிஞ்சுச் சிறு கைகளால் பிசைந்து துழாவப்பட்ட• கூழ் = எளிய உணவானது (கஞ்சி/சோறு),• அமிழ்தினும் = தேவாமிர்தத்தைக் காட்டிலும்• ஆற்ற இனிதே = பெற்றோருக்கு மிகவும் இனிமை தருவதாகும்.
மு.வரதராசன்
தம்முடைய மக்களின் சிறு கைகளால் அளாவப்பெற்ற உணவு, பெற்றோர்க்கு அமிழ்தத்தை விட மிக்க இனிமை உடையதாகும்.
பரிமேலழகர்
அமிழ்தினும் ஆற்ற இனிதே - சுவையான அமிழ்தத்தினும் மிக இனிமையுடைத்து; தம் மக்கள் சிறுகை அளாவிய கூழ் - தம் மக்களது சிறுகையான் அளாவப்பட்ட சோறு. (சிறுகையான் அளாவலாவது, 'இட்டும் தொட்டும் கவ்வியும் துழந்தும் - நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தல். புறநா.188)
சாலமன் பாப்பையா
தம் பிள்ளைகளின் சிறு கையால் பிசையப்பட்ட கூழ், அமிழ்தைக் காட்டிலும் மிக இனிது.
Meaning in English
Than God's ambrosia sweeter far the food before men laid, In which the little hands of children of their own have play'd





