தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்தம்தம் வினையான் வரும்.
tamporuL enpatam makkaL avarporuLtantam vinaiyAn varum
S. P. Sailaja
பொருள் / உரை
முருகா எளிய உரை
தம் பிள்ளைகளே தம்முடைய செல்வம் என்பார்!அறிஞர்கள் எல்லாரும் அதுவே மெய்யென்பார்!அப்பிள்ளை தரும்சிறப்பும் வந்தே சேருமே!அவரவர் நற்செயலால் வந்து சேருமே!
• தம் மக்கள் = ஒருவரது பிள்ளைகளே• தம் பொருள் என்ப = தமக்குரிய மெய்யான செல்வம் என்று அறிஞர் கூறுவர்;• அவர் பொருள் = அந்தப் பிள்ளைகள் தம்முடைய செல்வமாய் விளங்குவது• தம்தம் வினையான் வரும் = அவரவர் செய்கின்ற நற்செயல்களின் பயனால் வந்து சேரும்.
மு.வரதராசன்
தம்மக்களே தம்முடைய பொருள்கள் என்று அறிஞர் கூறுவர். மக்களாகிய அவர்தம் பொருள்கள் அவரவருடைய வினையின் பயனால் வந்து சேரும்.
பரிமேலழகர்
தம் மக்கள் தம் பொருள் என்ப - தம் புதல்வரைத் தம் பொருள் என்று சொல்லுவர் அறிந்தோர்; அவர் பொருள் தம் தம் வினையான் வரும் - அப்புதல்வர் செய்த பொருள் தம்மை நோக்கி அவர் செய்யும் நல்வினையானே தம்பால் வரும் ஆதலான். ('தம்தம் வினை' என்புழித் தொக்கு நின்ற ஆறாம் வேற்றுமை, 'முருகனது குறிஞ்சிநிலம்' என்புழிப் போல உரிமைப் பொருட்கண் வந்தது. பொருள் செய்த மக்களைப் 'பொருள்' என உபசரித்தார். இவை இரண்டு பாட்டானும் நன்மக்களைப் பெற்றார் பெறும் மறுமைப் பயன் கூறப்பட்டது.
சாலமன் பாப்பையா
பிள்ளைகளைத் தம் செல்வம் என்று அறிந்தோர் கூறுவர். அப்பிள்ளைகள் உள்ளபடியே செல்வமாவது அவரவர் செய்யும் நற்செயல்களால் அமையும்.
Meaning in English
'Man's children are his fortune,' say the wise; From each one's deeds his varied fortunes rise





