Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 62

அறத்துப்பால்இல்லறவியல்7. புதல்வரைப் பெறுதல்

எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்பண்புடை மக்கட் பெறின்.

ezhupiRappum tIyavai tINTA pazhipiRangkAppaNpuTai makkaT peRin

Chinni Jayanth

பொருள் / உரை

முருகா எளிய உரை

சொல் பொருள் (பதவுரை):• பழி பிறங்கா = பிறர் பழித்துரைக்காத குற்றமற்ற• பண்பு உடை = நற்குணங்களை உடைய• மக்கட் பெறின் = நற்பிள்ளைகளைப் பெற்றெடுத்தால்,• எழுபிறப்பும் = எழும் ஏழு பிறவிகளிலும்• தீயவை தீண்டா = தீவினையினால் உண்டாகும் துன்பங்கள் அந்தப் பெற்றோரைத் தீண்டவே மாட்டாது.எளிய விளக்கம்:பழியில்லாத பண்புடை மக்கள் பெற்றால்!குற்றமில்லாத நற்பிள்ளைகளைப் பெற்றால்!எழுபிறப்பும் தீவினைகள் தீண்டாதே!தீயவை எதுவும் அவரைத் தீண்டாதே!

மு.வரதராசன்

பழி இல்லாத நல்ல பண்பு உடைய மக்களைப்பெற்றால் ஒருவனுக்கு ஏழு பிறவியிலும் தீவினைப் பயனாகிய துன்பங்கள் சென்று சேரா.

பரிமேலழகர்

எழுபிறப்பும் தீயவை தீண்டா - வினைவயத்தால் பிறக்கும் பிறப்பு ஏழின்கண்ணும் ஒருவனைத் துன்பங்கள் சென்றடையா; பழி பிறங்காப் பண்பு உடை மக்கட்பெறின் - பிறரால் பழிக்கப்படாத நற்குணங்களை உடைய புதல்வரைப் பெறுவான் ஆயின். ('அவன் தீவினை வளராது தேய்தற்குக் காரணம் ஆகிய நல்வினைகளைச் செய்யும் புதல்வரைப் பெறுவான் ஆயின்' என்றவாறு ஆயிற்று. பிறப்பு ஏழாவன: 'ஊர்வ பதினொன்றாம் ஒன்பது மானிடம் நீர்பறவை நாற்கால் ஓர் பப்பத்துச் சீரிய, பந்தம்ஆம் தேவர் பதினான்கு அயன்படைத்த அந்தம் இல்சீர்த் தாவரம் நாலைந்து' தந்தை தாயர் தீவினை தேய்தற்பொருட்டு அவரை நோக்கிப் புதல்வர் செய்யும் தான தருமங்கட்கு அவர் நற்குணம் காரணமாகலின், 'பண்பு' என்னும் காரணப் பெயர் காரியத்தின்மேல் நின்றது.)

சாலமன் பாப்பையா

பழிக்கப்படாத நல்ல குணங்களை உடைய பிள்ளைகளைப் பெற்றால், பெற்றவளை அவனுடைய பிறவிகள்தோறும் துன்பங்கள் தொடமாட்டா.

Meaning in English

Who children gain, that none reproach, of virtuous worth, No evils touch them, through the sev'n-fold maze of birth

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout