அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்பிற்பயக்கும் நற்பா லவை.
azhakkoNTa ellAm azhappOm izhappinumpiRpayakkum naRpA lavai
Akshayaa
பொருள் / உரை
முருகா எளிய உரை
மற்றவர்களை ஏமாற்றி அழவைத்துச் சேர்த்த அநீதியான செல்வம் யாவும், தாமும் அழுது தவிக்கும்படி அழிந்துவிடும்; ஆனால் நல்வழியில் நேர்மையாகச் சேர்த்த செல்வம் ஒருவேளை இழக்கப்பட்டாலும், பின்னாளில் மீண்டும் பலமடங்கு பயன் தரும்.
• அழக்கொண்ட எல்லாம் அழப்போம் = பிறரை அழவைத்துச் சேர்த்த செல்வங்கள் தாமும் அழும்படி அழியும்;• நற்பாலவை இழப்பினும் பிற்பயக்கும் = நல்வழியில் வந்த செல்வம் இழந்தாலும் மீண்டும் பயன் தரும்.
மு.வரதராசன்
பிறர் வருந்துமாறு செய்து பெற்ற பொருள் எல்லாம் பெற்றவன் வருந்துமாறு செய்து போய்விடும், நல்வழியில் வந்தவை இழக்கப்பட்டாலும் பிறகு பயன் தரும்
பரிமேலழகர்
அழக்கொண்ட எல்லாம் அழப்போம் - ஒருவன், தீயவினைகளைச் செய்து பிறர் இரங்கக் கொண்ட பொருளெல்லாம் இம்மையிலே அவன் தான் இரங்கப் போகாநிற்கும்; நற்பாலவை இழப்பினும் பிற்பயக்கும் - மற்றைத்தூய வினையான் வந்த பொருள்கள் முன் இழந்தானாயினும் அவனுக்குப் பின்னர் வந்து பயன் கொடுக்கும். (பின் எனவே, மறுமையும் அடங்கிற்று. பொருள்களான் அவற்றிற்குக் காரணமாய வினைகளது இயல்பு கூறியவாறு.
சாலமன் பாப்பையா
பிறர் அழ அவரிடம் இருந்து கவர்ந்த பொருள் எல்லாம் நாம் அழ, நம்மை விட்டுப் போய்விடும். செயல் சுத்தத்தால் பெற்ற பொருளை நாம் இழந்தாலும் அவை நமக்குத் திரும்பவும் பலன் கொடுக்கும்.
Meaning in English
What's gained through tears with tears shall go; From loss good deeds entail harvests of blessings grow





