பழிமலைந்து எய்திய ஆக்கத்தின் சான்றோர்கழிநல் குரவே தலை.
pazhimalain teytiya AkkattiR sAnROrkazhinal kuravE talai
Abhilasha
பொருள் / உரை
முருகா எளிய உரை
பழிபாவங்களைச் சுமந்து கொண்டு தவறான வழியில் சேர்க்கும் செல்வத்தைக் காட்டிலும், ஒழுக்கமுடைய சான்றோர்கள் நேர்மையோடு வாழும்போது அனுபவிக்கும் கொடிய வறுமையே எவ்வளவோ மேலானதாகும்.
• பழிமலைந்து எய்திய ஆக்கத்தின் = பழிபாவங்களைச் சுமந்து ஈட்டிய செல்வத்தை விட,• சான்றோர் கழிநல்குரவே தலை = சான்றோர்கள் அனுபவிக்கும் கொடிய வறுமையே மேலானது.
மு.வரதராசன்
பழியை மேற்கொண்டு இழிதொழில் செய்து பெறும் செல்வத்தை விடச் சான்றோர் வினைத்தூய்மையோடிருந்து பெறும் பொல்லாத வறுமையே சிறந்தது.
பரிமேலழகர்
பழி மலைந்து எய்திய ஆக்கத்தின் - சாலாதார் தீய வினைகளைச் செய்து அதனாற் பழியைத் தம்மேற் கொண்டு பெற்ற செல்வத்தின்; சான்றோர் கழி நல்குரவே தலை - அதுமேற் கொள்ளாத சான்றோர் அனுபவிக்கும் மிக்க நல்குரவே உயர்ந்தது. (நிலையாத செல்வத்தின் பொருட்டு நிலையின பழியை மேற்கோடல் சால்போடு இயையாமையின், 'சான்றோர் கழிநல்குரவே தலை' என்றார்.)
சாலமன் பாப்பையா
பழியை ஏற்று அடைந்த செல்வத்தைக் காட்டிலும், பெரியோர் அனுபவிக்கும் வறுமையே உயர்ந்தது.
Meaning in English
Than store of wealth guilt-laden souls obtain, The sorest poverty of perfect soul is richer gain





