என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடுநன்றி பயவா வினை.
enRum oruvutal vENTum pukazhoTunanRi payavA vinai
Geethu Nirmala
பொருள் / உரை
முருகா எளிய உரை
நல்ல புகழையும் தர்மத்தின் நன்மையையும் தராத எந்த ஒரு தவறான செயலையும், எக்காலச் சூழலிலும் செய்யாமல் அடியோடு விட்டொழிக்க வேண்டும்.
• புகழொடு நன்றி பயவா வினை = நிலைத்த புகழையும் அறத்தின் நன்மையையும் தராத செயல்களை,• என்றும் ஒருவுதல் வேண்டும் = எக்காலத்திலும் செய்யாமல் அடியோடு விட்டொழிக்க வேண்டும்.
மு.வரதராசன்
புகழையும் அறத்தையும் தாராத (தூய்மை அற்ற) செயல்களை எக்காலத்திலும் ஒருவன் செய்யாமல் விட்டொழிக்க வேண்டும்.
பரிமேலழகர்
புகழொடு நன்றி பயவா வினை - தம் அரசனுக்கு இம்மைக்கண் புகழும் மறுமைக்கண் அறமும் பயவாத வினைகளை; என்றும் ஒருவுதல் லேண்டும் - அமைச்சர்க்கு எக்காலத்தும் ஒழிதல் வேண்டும். (பெருகல், சுருங்கல், இடைநிற்றல் என்னும் நிலைவேறுபாடு காலத்தான் வருதலின், 'என்றும்' என்றார். 'வேண்டும்' என்பது ஈண்டு இன்றியமையாது என்னும் பொருட்டு.)
சாலமன் பாப்பையா
இம்மைக்குப் புகழையும் மறுமைக்கு நன்மையையும் தராத செயல்களை எந்தக் காலத்திலும் விட்டுவிட வேண்டும்.
Meaning in English
From action evermore thyself restrain Of glory and of good that yields no gain





