Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 651

பொருட்பால்அங்கவியல்66. வினைத்தூய்மை

துணைநலம் ஆக்கம் த்ருஉம் வினைநலம்வேண்டிய எல்லாந் தரும்.

tuNainalam Akkan tarUum vinainalamvENTiya ellAn tarum

Neha Sinthu Sivaraman

பொருள் / உரை

முருகா எளிய உரை

ஒருவருக்கு அமையும் நல்ல துணையானது செல்வ வளர்ச்சியைத் தரும்; ஆனால் அவர் செய்யும் செயலின் அறத்தூய்மையானது அவர் விரும்புகின்ற எல்லா நன்மைகளையும் முழுமையாகத் தரும்.

• துணைநலம் ஆக்கந் தரூஉம் = நல்ல துணையானது ஒருவனுக்குச் செல்வத்தைத் தரும்;• வினைநலம் வேண்டிய எல்லாம் தரும் = தூய்மையான நற்செயலோ அவன் விரும்பிய எல்லாவற்றையும் தரும்.

மு.வரதராசன்

ஒருவனுக்கு வாய்த்த துணையின் நன்மை ஆக்கத்தைக் கொடுக்கும், செய்யும் வினையின் நன்மை அவன் விரும்பிய எல்லாவற்றையும் கொடுக்கும்.

பரிமேலழகர்

துணை நலம் ஆக்கம் தரூஉம் - ஒருவனுக்குத் துணையது நன்மை செல்வம் ஒன்றனையும் கொடுக்கும்; வினை நலம் வேண்டிய எல்லாம் தரும் - அவ்வளவன்றி வினையது நன்மை அவன் வேண்டியன யாவற்றையும் கொடுக்கும். (வேண்டிய எல்லாம் என்றது இம்மைக்கண் அறம், பொருள், இன்பம் முதலாயவற்றையும்,மறுமைக்கண் தான் விரும்பிய பதங்களையும். இதனான் காணப்படும் துணை நன்மையினும் கருதப்படும் வினை நன்மை சிறந்தது என வினைத்தூய்மையது சிறப்புக் கூறப்பட்டது.)

சாலமன் பாப்பையா

நல்ல துணை, செல்வம் தரும்; செயல் சுத்தமோ நாம் விரும்பிய எல்லாவற்றையும் தரும்.

Meaning in English

The good external help confers is worldly gain; By action good men every needed gift obtain

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout