Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 650

பொருட்பால்அங்கவியல்65. சொல்வன்மை

இண்ருழ்த்தும் நாறா மலரனையர் கற்றதுஉணர விரித்துரையா தார்.

iNarUzhttu nARA malaranaiyar kaRRatuNara virinturaiyA tAr

Amirthavarshini

பொருள் / உரை

முருகா எளிய உரை

தாம் கற்றுவைத்த கல்வியறிவைப் பிறர் மனத்தில் பதியும்படி தெளிவாக விளக்கிச் சொல்லத் தெரியாதவர், கொத்துக் கொத்தாக மலர்ந்திருந்த போதிலும் நறுமணம் வீசாத பூவைப் போன்றவராவார்.

• கற்றது உணர விரித்துரையா தார் = கற்ற கல்வியைப் பிறர் உணருமாறு விளக்கிச் சொல்லத் தெரியாதவர்,• இணரூழ்த்தும் நாறா மலரனையர் = கொத்தாக மலர்ந்திருந்தும் மணக்காத மலரைப் போன்றவராவார்.

மு.வரதராசன்

தாம் கற்ற நூற்ப் பொருளைப் பிறர் உணருமாறு விரிந்துரைக்க முடியாதவர், கொத்தாக மலர்ந்திருந்த போதிலும் மணம் கமழாத மலரைப் போன்றவர்.

பரிமேலழகர்

கற்றது உணர விரித்து உரையாதார் - கற்றுவைத்த நூலைப் பிறரறியும் வண்ணம் விரித்துரைக்கமாட்டாதவர்; இணர் ஊழ்த்தும் நாறா மலர் அனையர் - கொத்தின்கண்ணே மலர்ந்து வைத்தும் நாறாத பூவையொப்பர். (செவ்வி பெற மலர்ந்து வைத்தும் நாற்றம் இல்லாத பூச் சூடப்படாதவாறு போல, நூலைக் கற்றுவைத்தும் சொல்ல மாட்டாதார் நன்கு மதிக்கப்படார் என்றமையின், இது தொழில் உவமம் ஆயிற்று. இவை இரண்டு பாட்டானும் அது மாட்டாதாரது இழிபு கூறப்பட்டது.)

சாலமன் பாப்பையா

தான் கற்றதைப் பிறர் மனங்கொள்ள விளக்கிச்சொல்லும் ஆற்றல் அற்றவர், கொத்தாக மலர்ந்தும் மணக்காத மலர் போன்றவர்.

Meaning in English

Like scentless flower in blooming garland bound Are men who can't their lore acquired to other's ears expound

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout