Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 649

பொருட்பால்அங்கவியல்65. சொல்வன்மை

பலசொல்லக் காமுறுவர் மன்றமா சற்றசிலசொல்லல் தேற்றா தவர்.

palasollak kAmuRuvar manRamA saRRasilasollal tERRA tavar

Vijay Prakash

பொருள் / உரை

முருகா எளிய உரை

குற்றமற்ற சில சொற்களைக் கொண்டே கருத்தைத் தெளிவாகப் புரிய வைக்கும் ஆற்றல் இல்லாதவர்களே, அவையில் தேவையின்றிப் பலப்பல சொற்களை அடுக்கிக் கொண்டே பேச விரும்புவார்கள்.

• மாசற்ற சிலசொல்லல் தேற்றாதவர் = குற்றமற்ற சில சொற்களால் கருத்தை உணர்த்தத் தெரியாதவர்கள்,• பலசொல்லக் காமுறுவர் மன்ற = நிச்சயமாகப் பலப்பல வீண் சொற்களைப் பேச விரும்புவார்கள்.

மு.வரதராசன்

குற்றமற்றவையாகியச் சில சொற்களைச் சொல்லத் தெரியாதவர், உண்மையாகவே பலச் சொற்களைச் சொல்லிக்கொண்டிருக்க விரும்புவர்.

பரிமேலழகர்

மாசு அற்ற சில சொல்லல் தேற்றாதவர் - குற்றமற்றனவாய்ச் சிலவாய வார்த்தைகளை அவ்வாற்றால் சொல்லுதலை அறியாதார்; பல சொல்லக் காமுறுவர் - பலவாய வார்த்தைகளைத் தொடுத்துச் சொல்ல விரும்புவர். (குற்றம் - மேல் சொல்லிய குணங்கட்கு மறுதலையாயின. இடைவிடாது பல சொல்லுதலையும் சொல்வன்மை என்று விரும்புவாரும் உளர், அவர் இவ்வாறு சொல்ல மாட்டாதாரே வல்லார் அது செய்யாரென யாப்புறுப்பார், 'மன்ற' என்றார்.)

சாலமன் பாப்பையா

குற்றமற்ற சில சொற்களால் சொல்லும் ஆற்றல் இல்லாதவர், பலபல சொற்களைப் பேச விரும்புவர்.

Meaning in English

Who have not skill ten faultless words to utter plain, Their tongues will itch with thousand words man's ears to pain

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout