திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும்பொருளும் அதனினூஉங்கு இல்.
tiRanaRintu solluka sollai aRanumporuLum ataninUung kil
R. Venkataraman
பொருள் / உரை
முருகா எளிய உரை
கேட்பவரின் தகுதி, மனநிலை மற்றும் சூழலை அறிந்து அதற்கேற்பப் பொருந்துமாறு பேச வேண்டும்; அப்படிப் பேசுவதை விட மேலான தர்மமும் நன்மையும் வேறு எதுவும் இல்லை.
• திறனறிந்து சொல்லுக சொல்லை = கேட்பவரின் தகுதியையும் சூழலையும் அறிந்து பேச வேண்டும்;• அறனும் பொருளும் அதனினூஉங்கில் = அவ்வாறு பேசுவதை விடச் சிறந்த அறமும் நற்பயனும் வேறு இல்லை.
மு.வரதராசன்
சொல்லின் திறத்தை அறிந்து சொல்லை வழங்க வேண்டும், அத் தகைய சொல்வன்மையை விடச் சிறந்த அறமும் பொருளும் இல்லை.
பரிமேலழகர்
சொல்லைத் திறன் அறிந்து சொல்லுக - அப்பெற்றித்தாய சொல்லை, அமைச்சர் தம்முடையவும், கேட்பாருடையவுமாய திறங்களை அறிந்து சொல்லுக; அதனின் ஊங்கு அறனும் பொருளும் இல் - அங்ஙனம் சொல்லுதற்கு மேற்பட்ட அறனும் பொருளும் இல்லையாகலான். (அத்திறங்களாவன: குடிப்பிறப்பு , கல்வி, ஒழுக்கம், செல்வம், உருவம், பருவம் என்பவற்றான் வரும் தகுதி வேறுபாடுகள். அவற்றை அறிந்து சொல்லுதலாவது, அவற்றால் தமக்கும் அவர்க்கும் உளவாய ஏற்றத்தாழ்வுகளை அறிந்து அவ்வம் மரபாற் சொல்லுதல். அஃது உலகத்தோடு ஒட்ட ஒழுகலையும் இனிமையையும் பயத்தலின் அறனாயிற்று. தம் காரியம் முடித்தலின் பொருளாயிற்று. அறனும் பொருளும் எனக் காரணத்தைக் காரியமாக்கிக் கூறினார்.)
சாலமன் பாப்பையா
எவரிடம் பேசகிறோமோ அவர் குடிப்பிறப்பு, கல்வி, ஒழுக்கம், செல்வம், தோற்றம், வயது ஆகிய தகுதிகளை அறிந்து பேச்சு; அப்படிப் பேசுவதைவிட உயர்ந்த அறமும் பொருளும் வேறு இல்லை.
Meaning in English
Speak words adapted well to various hearers' state; No higher virtue lives, no gain more surely great





