Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 642

பொருட்பால்அங்கவியல்65. சொல்வன்மை

ஆக்கமுங் கேடும் அதனால் வருதலால்காத்தோம்பல் சொல்லின்கட் சோர்வு.

Akkamung kETum atanAl varutalARkAttOmpal sollinkaT sOrvu

Bairavi Gopi & Ranjani Mahesh

பொருள் / உரை

முருகா எளிய உரை

ஒருவருக்கு நல்வளர்ச்சியும் பெருமையும் சேர்வதும், கேடும் அழிவும் உண்டாவதும் அவர் பேசும் சொல்லினாலேயே ஏற்படுகின்றன; எனவே, தான் பேசும் பேச்சில் பிழை நேர்ந்துவிடாமல் விழிப்புடன் காத்துக் கொள்ள வேண்டும்.

• ஆக்கமுங் கேடும் அதனால் வருதலால் = நன்மையும் அழிவும் பேசும் சொல்லாலேயே ஏற்படுவதால்,• சொல்லின்கட் சோர்வு காத்தோம்பல் = பேசும் சொல்லில் பிழை நேராமல் விழிப்புடன் காக்க வேண்டும்.

மு.வரதராசன்

ஆக்கமும் கேடும் சொல்லுகின்ற சொல்லால் வருவதால் ஒருவன் தன்னுடைய சொல்லிற்க்கு தவறு நேராமல் காத்துக்கொள்ள வேண்டும்

பரிமேலழகர்

ஆக்கமும் கேடும் அதனால் வருதலால் - தம் அரசர்க்கும் அங்கங்கட்கும் ஆக்க அழிவுகள் தம் சொல்லான் வரும் ஆகலான்; சொல்லின்கண் சோர்வு காத்து ஓம்பல் - அப்பெற்றித்தாய சொல்லின்கண் சோர்தலை அமைச்சர் தம்கண் நிகழாமல் போற்றிக் காக்க. (ஆக்கத்திற்கு ஏதுவாய நற்சொல்லையும் கேட்டிற்கு ஏதுவாய தீச்சொல்லையும், சொல்லாதல் ஒப்புமைபற்றி 'அதனால்' என்றார். செய்யுள் ஆகலின் சுட்டுப் பெயர் முன் வந்தது. பிறர் சோர்வு போலாது உயிர்கட்கு எல்லாம் ஒருங்கு வருதலால், 'காத்து ஓம்பல்' என்றார். இவை இரண்டு பாட்டானும் இஃது இவர்க்கு இன்றியமையாதது என்பது கூறப்பட்டது.)

சாலமன் பாப்பையா

அவரவர் சொல் திறந்தாலேயே நன்மையும், தீமையும் வருவதால், பேசும் பேச்சில் பிழை வராமல் விழிப்புடன் பேசுக.

Meaning in English

Since gain and loss in life on speech depend, From careless slip in speech thyself defend

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout