முறைப்படச் சூழ்ந்தும் முடிவிலவே செய்வர்திறப்பாடு இலாஅ தவர்.
muRaippaTas sUzhntu muTivilavE seyvartiRappA TilAa tavar
Divya Ramesh
பொருள் / உரை
முருகா எளிய உரை
காரியங்களை முறைப்படி திட்டமிட்டு வைத்திருந்த போதிலும், நடைமுறைச் செயல்திறன் இல்லாதவர்கள் களத்தில் அவற்றைச் செயல்படுத்தும்போது அரைகுறையாகவே செய்து பாழாக்கி விடுவார்கள்.
• முறைப்படச் சூழ்ந்தும் = முறையாகத் திட்டமிட்டு வைத்திருந்தாலும்,• திறப்பாடு இலாதவர் = செயல்திறன் இல்லாதவர்கள்,• முடிவிலவே செய்வர் = காரியங்களை அரைகுறையாகவே செய்து முடிப்பர்.
மு.வரதராசன்
(செயல்களைச் முடிக்கும்) திறன் இல்லாதவர், முன்னே எண்ணி வைத்திருந்தும் (செய்யும் போது) குறையானவைகளையேச் செய்வர்.
பரிமேலழகர்
முறைப்படச் சூழ்ந்தும் முடிவிலவே செய்வர் - செய்யப்படும் வினைகளை முன் அடைவுபட எண்ணி வைத்தும், செய்யுங்கால் அவை முடிவிலவாகவே செய்யாநிற்பர்; திறப்பாடு இலாதவர் - முடித்தற்கு ஏற்ற கூறுபாடு இல்லாதார். (அக்கூறுபாடாவன: வந்த இடையூறுகட்கு ஏற்ற பரிகாரம் அறிந்து செய்தலும், தாம் திண்ணியராதலுமாம். பிழையாமல் எண்ண வல்லராய் வைத்தும் செய்து முடிக்கமாட்டாரும் உளர் என்பதாம். இவை இரண்டு பாட்டானும் அமைச்சருள் விடப்படுவாரது குற்றம் கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா
செயல்திறம் இல்லாத அமைச்சர், செய்ய வேண்டியவற்றை முறையாக எண்ணி வைத்திருந்தாலும், அவற்றைச் செய்யும்போது அரைகுறையாகவே செய்வார்.
Meaning in English
For gain of end desired just counsel nought avails To minister, when tact in execution fails





