Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 639

பொருட்பால்அங்கவியல்64. அமைச்சு

பழுதெண்ணும் மந்திரியின் பக்கததுள் தெவ்வோர்எழுபது கோடி உறும்.

pazhuteNNum mantiriyiR pakkattuL tevvOrezhupatu kOTi uRum

O.S. Arun

பொருள் / உரை

முருகா எளிய உரை

அருகிலேயே நின்றுகொண்டு நாட்டுக்குக் கேடு செய்ய எண்ணும் ஒரு துரோக அமைச்சனை விட, வெளிப்படையாக நின்று போரிடும் எழுபது கோடிப் பகைவர்கள் பக்கத்தில் இருப்பது எவ்வளவோ மேலானதாகும்.

• பழுதெண்ணும் மந்திரியின் = அருகிலேயே இருந்து கேடு எண்ணும் துரோக அமைச்சனை விட,• பக்கத்துள் தெவ்வோர் எழுபது கோடி உறும் = நேரில் எதிர்க்கும் எழுபது கோடிப் பகைவர்கள் அருகில் இருப்பது எவ்வளவோ மேலாகும்.

மு.வரதராசன்

தவறான வழிகளை எண்ணி கூறுகின்ற அமைச்சனை விட எழுபது கோடி பகைவர் பக்கத்தில் இருந்தாலும் நன்மையாகும்.

பரிமேலழகர்

பக்கத்துள் பழுது எண்ணும் மந்திரியின் - பக்கத்திருந்து பிழைப்ப எண்ணும் அமைச்சன் ஒருவனில்; ஓரெழுபதுகோடி தெவ்உறும் - அரசனுக்கு எதிர் நிற்பார் ஓரெழுபதுகோடி பகைவர் உறுவர். (எழுபது கோடி என்றது மிகப் பலவாய எண்ணிற்கு ஒன்று காட்டியவாறு. வெளிப்பட நிற்றலான் அவர் காக்கப்படுவர்; இவன் உட்பகையாய் நிற்றலான் காக்கப்படான் என்பதுபற்றி இவ்வாறு கூறினார். 'எழுபது கோடி மடங்கு நல்லர்' என்று உரைப்பாரும், 'எழுபது கூறுதலை' என்று பாடம் ஓதுவாரும் உளர்.)

சாலமன் பாப்பையா

தன் கட்சிக்காரராய் அருகிலேயே இருந்தும், நாட்டு நலனை எண்ணாமல் தன்னலமே எண்ணும் அமைச்சர், எழுபது கோடி எதிர்கட்சிக்காரருக்குச் சமம் ஆவார்.

Meaning in English

A minister who by king's side plots evil things Worse woes than countless foemen brings

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout