Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 638

பொருட்பால்அங்கவியல்64. அமைச்சு

அறிகொன்று அறியான் எனினும் உறுதிஉழையிருந்தான் கூறல் கடன்.

aRikon RaRiyAn eninum uRutiuzhaiyiruntAn kURal kaTan

Kaushik Kumar

பொருள் / உரை

முருகா எளிய உரை

சொல் பொருள் (பதவுரை):• அறிகொன்று அறியான் எனினும் = நல்லுரைகளை மதிக்காமல் தானாகவும் அறியாத மன்னனாக இருந்தாலும்,• உறுதி கூறல் உழையிருந்தான் கடன் = நாட்டுக்கு நன்மை தரும் உறுதியான ஆலோசனைகளைத் துணிவோடு எடுத்துரைப்பதே அமைச்சனின் கடமையாகும்.எளிய விளக்கம்:சொல்லிக் கொடுக்கும் நல்லுரைகளை மதிக்காமல் தானாகவும் அறியாதவனாக ஓர் ஆட்சியாளன் இருந்தபோதிலும், அவனுக்கு அருகிலிருக்கும் அமைச்சன் நாட்டுக்கு நன்மை தரும் உறுதியான நல்லுரைகளை அஞ்சாமல் எடுத்துரைப்பதே கடமையாகும்.

மு.வரதராசன்

அறிவுறுத்துவாரின் அறிவையையும் அழித்துத் தானும் அறியாதவனாக அரசன் இருந்தாலும், அமைச்சன் அவனுக்கு உறுதியானவற்றை எடுத்துக்கூறல் க‌டமையாகும்.

பரிமேலழகர்

அறி கொன்று அறியான் எனினும் - அறிந்து சொல்லியாரது அறிவையும் அழித்து அரசன் தானும் அறியானே ஆயினும்; உறுதி கூறல் உழையிருந்தான் கடன் - அக்குற்றம் நோக்கி ஒழியாது, அவனுக்கு உறுதியாயின கூறுதல் அமைச்சனுக்கு முறைமை. ('அறி' என்பது முதனிலைத் தொழிற்பெயர். கோறல் - தான் கொள்ளாமை மேலும் இகழ்ந்து கூறுதல். 'உழையிருந்தான்' எனப்பெயர் கொடுத்தார், 'அமாத்தியர்' என்னும் வடமொழிப் பெயர்க்கும் பொருண்மை அதுவாகலின். உறுதி கூறாக்கால், அவனது இறுதி எய்தல் குற்றத்தை உலகம் தன்மேல் ஏற்றும் என்பார். 'கூறல் கடன்' என்றார். இவை இரண்டு பாட்டானும் அவர் செயல் கூறப்பட்டது.)

சாலமன் பாப்பையா

அறிந்து சொல்பவர் அறிவையும் மதியாமல், செய்யவேண்டிய வழிகளைத் தாமும் தெரியாமல், ஆட்சியாளர் இருந்தால், அக்குற்றம் கண்டு கோபம் கொள்ளாமல், அஞ்சாமல், அவருக்கு நன்மை தருவதைக் கூற வேண்டியது அமைச்சர் கடமையாகும்.

Meaning in English

'Tis duty of the man in place aloud to say The very truth, though unwise king may cast his words away

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout