Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 636

பொருட்பால்அங்கவியல்64. அமைச்சு

மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு அதிநுட்பம்யாவுள முன்நிற் பவை.

matinuTpa nUlO TuTaiyArk katinuTpamyAvuLa munniR pavai

Thuvaragaa Balendran

பொருள் / உரை

முருகா எளிய உரை

சொல் பொருள் (பதவுரை):• மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு = இயற்கையான மதிநுட்பத்தோடு நூலறிவும் பெற்றவர்களுக்கு,• அதிநுட்பம் முன்நிற்பவை யாவுள = பகைவர்களின் எத்தகைய நுட்பமான சூழ்ச்சிகளும் எதிர்த்து நிற்க முடியாது.எளிய விளக்கம்:இயற்கையான நுண்ணறிவோடு சிறந்த நீதி நூல்களின் கல்வியறிவையும் ஒருங்கே பெற்றிருக்கின்ற அமைச்சர்களுக்கு முன்னால், பகைவர்களின் எத்தகைய கொடிய நுட்பமான சூழ்ச்சிகளும் எதிர்த்து நிற்க முடியாது.

மு.வரதராசன்

இயற்கையான நுட்ப அறிவை நூலறிவோடு ஒருங்கே உடையவர்க்கு மிக்க நுட்பமான சூழ்ச்சிகளாய் முன் நிற்பவை எவை உள்ளன.

பரிமேலழகர்

மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு - இயற்கையாகிய நுண்ணறிவைச் செயற்கை ஆகிய நூலறிவோடு உடையவராய அமைச்சர்க்கு; அதி நுட்பம் முன் நிற்பவை யாஉள - மிக்க நுட்பத்தையுடைய சூழ்ச்சிகளாய் முன்நிற்பன யாவையுள? ('மதி நுட்பம்' என்பது பின்மொழி நிலையல்,அது தெய்வம் தர வேண்டுதலின் முன்கூறப்பட்டது. 'நூல்' என்பதூஉம், 'அதிநுட்பம்' என்பதூஉம் ஆகுபெயர். 'அதி' என்பது வடசொல்லுள் மிகுதிப் பொருளதோர் இடைச்சொல், அது திரிந்து நுட்பம் என்பதனோடு தொக்கது. 'முன் நிற்றல்' மாற்றார் சூழ்ச்சியாயின தம் சூழ்ச்சியால் அழியாது நிற்றல். இனி 'அதினுட்பம்' என்று பாடம் ஓதி, 'அதனின் நுட்பம் யா' என்று உரைப்பாரும் உளர். அவர் சூழ்ச்சிக்கு இனமாய் முன் சுட்டப்படுவது ஒன்றில்லாமையும், சுட்டுப்பெயர் ஐந்தாம் உருபு ஏற்றவழி அவ்வாறு நில்லாமையும் அறிந்திலர். பகைவர் சூழ்வனவற்றைத் தாம் அறிந்து அழித்து, அவர் அறிந்து அழியாதன தாம் சூழ்வர் என்பது கருத்து. இதனான் அவரது சிறப்புக் கூறப்பட்டது.)

சாலமன் பாப்பையா

இயல்பான நுண்ணறிவோடு செயற்கை ஆகிய நூல் அறிவையும் உடைய அமைச்சருக்கு எதிராக, மிகுந்த நுட்பமான சூழ்ச்சிகள் என்று எவை நிற்கமுடியும்?

Meaning in English

When native subtilty combines with sound scholastic lore, 'Tis subtilty surpassing all, which nothing stands before

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout