அறனறிந்து ஆன்றமைந்த சொல்லான்எஞ் ஞான்றுந்திறனறிந்தான் தேர்ச்சித் துணை.
aRanaRin tAnRamainta sollAnenj njAnRuntiRanaRintAn tErssit tuNai
Sasin Prabhu
பொருள் / உரை
முருகா எளிய உரை
அறவழியை உணர்ந்தவனாய், கல்வியறிவோடு பக்குவமான சொற்களைப் பேசுபவனாய், எக்காலத்திலும் காரியங்களைச் சாதிக்கும் செயல்திறன் அறிந்தவனே ஓர் ஆட்சியாளருக்கு ஆலோசனைகள் தந்து முடிவெடுக்கும் சிறந்த துணையாவான்.
• அறனறிந்து ஆன்றமைந்த சொல்லான் = அறத்தை உணர்ந்து பக்குவமான சொற்களைப் பேசுபவனாய்,• எஞ்ஞான்றும் திறனறிந்தான் = எக்காலத்தும் காரியம் சாதிக்கும் திறனை அறிந்தவன்,• தேர்ச்சித் துணை = சிறந்த ஆலோசனை தரும் உற்ற துணையாவான்.
மு.வரதராசன்
அறத்தை அறிந்தவனாய், அறிவு நிறைந்து அமைந்த சொல்லை உடையவனாய், எக்காலத்திலும் செயல்செய்யும் திறன் அறிந்தவனாய் உள்ளவன் ஆராய்ந்து கூறும் துணையாவான்.
பரிமேலழகர்
அறன் அறிந்து ஆன்று அமைந்த சொல்லான் - அரசனால் செய்யப்படும் அறங்களை அறிந்து, தனக்கு ஏற்ற கல்வியான் நிறைந்து அமைந்த சொல்லை உடையனாய்; எஞ்ஞான்றும் திறன் அறிந்தான் - எக்காலத்தும் வினை செய்யும் திறங்களை அறிந்தான்; தேர்ச்சித் துணை - அவற்குச் சூழ்ச்சித் துணையாம். (தன் அரசன் சுருங்கிய காலத்தும், பெருகிய காலத்தும், இடைநிகராய காலத்தும் என்பார், 'எஞ்ஞான்றும்' என்றார். 'சொல்லான்' என்பதனை 'ஒடு' உருபின் பொருட்டாய ஆன் உருபாக்கி உரைப்பாரும் உளர். இவை ஐந்து பாட்டானும் அமைச்சரது குணத்தன்மை கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா
அறத்தை அறிந்து கல்வியால் நிறைந்து, அடக்கமான சொல்லை உடையவராய், எப்போதும் செயலாற்றும் முறைகளைத் தெரிந்தவரே கலந்து முடிவு எடுப்பதற்கு ஏற்ற துணையாவார்.
Meaning in English
The man who virtue knows, has use of wise and pleasant words With plans for every season apt, in counsel aid affords





