தெரிதலும் தேர்ந்து செயலும் ஒருதலையாச்சொல்லலும் வல்லது அமைச்சு.
teritalun tErntu seyalum orutalaiyAssollalum valla tamaissu
Aswin Prasad S
பொருள் / உரை
முருகா எளிய உரை
செய்ய வேண்டிய காரியத்தை ஆழமாக ஆராய்தல், அதற்குரிய சிறந்த வழியைத் தேர்ந்தெடுத்துச் செய்து முடித்தல், நன்மையான முடிவை மன்னரிடம் தயக்கமின்றி உறுதியாக எடுத்துரைத்தல் ஆகியவற்றில் வல்லவனே சிறந்த அமைச்சனாவான்.
• தெரிதலும் = காரியத்தை ஆழமாக ஆராய்ந்தறிவதிலும்,• தேர்ந்து செயலும் = சிறந்த வழியைத் தேர்ந்தெடுத்துச் செய்வதிலும்,• ஒருதலையாச் சொல்லலும் = முடிவை உறுதியாக எடுத்துரைப்பதிலும்,• வல்லதமைச்சு = வல்லமை படைத்தவனே சிறந்த அமைச்சன்.
Murugaa simple commentary
One who is capable in deeply investigating the task to be done, selecting the best way for it and accomplishing it, and firmly conveying the beneficial decision to the king without hesitation, is the best minister.
• Discerning = in deeply investigating and understanding the matter,• Choosing and acting = in selecting the best way and doing it,• Speaking decisively = in firmly conveying the decision,• Capable ministry = one who has capability is the best minister.
Machine translation from the Tamil
மு.வரதராசன்
(செய்யத்தக்க செயலை) ஆராய்தலும், அதற்குரிய வழிகளை ஆராய்ந்து செய்தலும், துணிவாகக் கருத்தைச் சொல்லுதலும் வல்லவன் அமைச்சன்.
பரிமேலழகர்
தெரிதலும் - ஒருகாரியச் செய்கை பலவாற்றால் தோன்றின் அவற்றுள் ஆவது ஆராய்ந்தறிதலும்; தேர்ந்து செயலும் - அது செய்யுங்கால் வாய்க்கும் திறன் நாடிச் செய்தலும்; ஒருதலையாச் சொல்லுதலும் - சிலரைப் பிரித்தல் பொருத்தல் செயற்கண், அவர்க்கு இதுவே செயற்பாலது என்று துணிவு பிறக்கும் வகை சொல்லுதலும்; வல்லது அமைச்சு - வல்லவனே அமைச்சனாவான். (தெரிதல், செயன் மேலதாயிற்று. வருகின்றது அதுவாகலின்.)
Parimelazhagar
Ascertaining, examining and knowing which will succeed among them when the execution of a task appears in many ways; acting after deliberation, seeking the method by which it will succeed when doing it and doing it; and speaking decisively, in the act of separating or uniting some people, speaking in a manner that creates certainty for them that this alone is what should be done; one who is capable is a minister, only one who is capable of these becomes a minister. (Ascertaining pertains to action. Because what follows is that.)
Machine translation from the Tamil
சாலமன் பாப்பையா
ஒரு செயலைப் பற்றி பலவகையிலும் ஆராய்ந்து அறிதல், வாய்ப்பு வரும்போது ஆராய்ந்தபடி செய்தல், நன்மை தருவனவற்றையே உறுதியாகச் சொல்லுதல் என்னும் இவற்றில் வல்லவரே அமைச்சர்.
Meaning in English
A minister has power to see the methods help afford, To ponder long, then utter calm conclusive word

