Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 628

பொருட்பால்அரசியல்63. இடுக்கணழியாமை

இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்துன்பம் உறுதல் இலன்.

inpam vizhaiyAn iTumpai iyalpenpAntunpa muRutal ilan

Seenu

பொருள் / உரை

முருகா எளிய உரை

எப்போதும் சுகபோகங்களையே விரும்பாமல், 'துன்பங்கள் வருவது வாழ்க்கையின் இயல்பே' என்று தெளிவாக உணர்ந்து வாழ்பவன், துன்பங்கள் நேரும்போது ஒருபோதும் மனம் தளர்ந்து துன்பத்தை அடையமாட்டான்.

• இன்பம் விழையான் = சுகபோகங்களை எப்போதும் விரும்பாதவனாய்,• இடும்பை இயல்பென்பான் = 'துன்பம் வருவது இயற்கைதான்' என்று தெளிந்திருப்பவன்,• துன்பம் உறுதல் இலன் = துன்பம் வரும்போது மனம் தளர்ந்து துன்பத்தை அடையமாட்டான்.

மு.வரதராசன்

இன்பமானதை விரும்பாதவனாய்த் துன்பம் இயற்கையானது என்று தெளிந்திருப்பவன், துன்பம் வந்த போது துன்ப முறுவது இல்லை.

பரிமேலழகர்

இன்பம் விழையான் இடும்பை இயல்பு என்பான் - தன் உடம்பிற்கு இன்பமாயவற்றை விரும்பாதே வினையால் இடும்பை எய்தல் இயல்பு என்று தெளிந்திருப்பான்; துன்பம் உறுதல் இலன் - தன் முயற்சியால் துன்பமுறான். (இன்பத்தை விழையினும், இடும்பையை இயல்பு என்னாது காக்கக் கருதினும் துன்பம் விளைதலின்,இவ்விரண்டுஞ் செய்யாதானைத் 'துன்பம் உறுதல் இலன்' என்றார்.)

சாலமன் பாப்பையா

உடம்பிற்கு இன்பம் விரும்பாதவனாய், அதற்கு வரும் துன்பத்தை இயல்புதானே என்பவன், மனம் தளர்ந்து துன்பப்படமாட்டான்.

Meaning in English

He seeks not joy, to sorrow man is born, he knows; Such man will walk unharmed by touch of human woes

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout